பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு231

Untitled Document
1367 இலைகள்விரித் திடுவோம்,
     இளநீர்கள் வைப்போம்;
குலைகுலையாய்க் கனிகள்
     கொண்டுவந்து வைப்போம்.

1368 பச்சைமஞ்சள் இஞ்சி
     படைபடையாய் வைப்போம்;
இச்சைதரு கரும்பும்
     இடையிடையே நடுவோம்.

1369 அகில் விறகை மாட்டி
     அடுப்பில் எரி மூட்டி,
பகவன் அடி போற்றிப்
     பானையேற்றி வைப்போம்.

1370 தங்கத்தினால் பானை,
     தரளம்என அரிசி
பொங்கலும்பால் பொங்கல்
     புத்தமுதப் பொங்கல்!

1371 பானையுமே பொங்கிப்
     பால்வடியும் வேளை,
வானம்எழக் குரவை
     வழங்கிவலம் வருவோம்.

1372 கடவுட்கமு தளிப்போம்;
     காகத்துக்கும் இடுவோம்;
உடனிருந்தெல் லோரும்
     உண்டுமகிழ்ந் திடுவோம்.

265. ஆரல்வாய்மொழி
1373 கம்பனையும் சோழனையும் காத்திடுவோம் காற் றரசின்
வம்பினுக்கும் அஞ்சாது வாழ்ந்திடுவோம் - உம்பர்கோன்
வானைமழை பெய்ய மறுத்திடினும் மற்றெங்கள்
கூனைமழைக் குண்டோ, குறை?

1374 பச்சடியும் தீண்டேன் பரப்பினும் கைவை யேன்
கிச்சடியும் தீண்டேன் கிழங்கும் எடேன் - மெச்சுபுகழ்
ஆரைப் பதியில் அவித்துக் கடைந்துவைத்த
கீரைக் கறிகிடைக்கு மேல்.