பக்கம் எண் :

230கவிமணியின் கவிதைகள்

Untitled Document
  அஞ்சாத வீரரெங்கும் தோன்ற வேண்டும்;
     அகிம்சா தருமமவர் பேண வேண்டும்;
என்சாதி உயர்சாதி இழிந்தசாதி
     என்றுசொல நாவுமெழா திருக்கவேண்டும்;
நெஞ்சாரும் நினைப்பெல்லாம் நிகர்த்தி நின்றேன்;
     நின்மலனே இரங்கிநீ அருள்செய் வாயே.

1362 தருமநெறி தவறாது தழைக்க வேண்டும்;
     பயிர்களெல்லாம் செழித்தோங்கி வளர வேண்டும்;
தருமநெறி தவறாது தழைக்க வேண்டும்;
     சாதிமதச் சண்டையெலாம் ஒழிய வேண்டும்;
திருமகளும் கலைமகளும் சிறக்க வேண்டும்;
     தேசாபி மானமெங்கும் திகழவேண்டும்;
கருமமெலாம் நற்கரும மாக வேண்டும்;
     காந்திமதி நின்னடிகள் வாழ்த்தி னேனே.

264. தைப் பொங்கல்

1363 பொங்கல்! இன்று பொங்கல்!
     புதுவருஷப் பொங்கல்!
மங்கலங்கள் பொங்க
     மனையிலிடும் பொங்கல்!

1364 சந்தனத்தைக் குழைத்துத்
     தரையைமெழு கிடுவோம்;
சிந்துரத்தாற் கோலம்
     சேர அதில் அமைப்போம்.

1365 எங்கள்கண பதியை
     எழுந்தருளச் செய்வோம்;
மங்கலநற் பொருள்கள்
     வரிசைகொள வைப்போம்.

1366 வாசமிக வீசும்
     மலர் எடுத்து வருவோம்;
நேசமொடு தூவி
     நின்றுதொழு திடுவோம்;