பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு229

Untitled Document
1355 கோபுரம்சேர் கோயிலொடு குடிசைகட்டும்கையே
குளங்கிணறு குட்டையெலாம் குழித்து தவும்கையே;
ஆபரணம் பணிமணிகள் ஆய்ந்துசெய்யும் கையே;
ஆடைகள்பா வாடைகளும் ஆக்குமெழிற்கையே!

1356 மல்லயுத்தம் செய்வதற்கு வந்துநிற்கும் கையே;
வாள்பிடித்து வகைவகையாய் மரம் அறுக்கும் கையே;
நெல்லைக்குத்தும் அரிசிதீட்டும் நொய் கொழிக்கும் கையே;
நேயரோடு பாண்டியாடி நிதம்ஜெயிக்கும் கையே!

1357 நாடியசீர் நாடடைய ராட்டுருட்டும் கையே;
நல்லகதர் நெய்யமிகு வல்லமைகொள் கையே;
பாடியவாய் தேனூறும் பாரதியார் பாடல்
பண்ணமையப் பாடுதற்குப் பாணிகொட்டுங் கையே!

1358 அழைப்பதற்கும் அகற்றுதற்கும் அபிநயிக்கும் கையே;
ஆக்குதற்கும் அழிப்பதற்கும் ஆற்றல் பெறும் கையே;
உழைப்பதற்கும் ஊட்டுதற்கும் ஊக்கமுறும் கையே;
உதவுவதற்கும் ஏற்பதற்கும் உரிமைகொளும் கையே!

1359 மக்களைத்தம் ஒக்கல்வைத்து வளர்ந்திடுமென் கையே;
வண்ணமலர் தலைக்கணிந்து வாசமூட்டுங் கையே;
தக்கபெரி யோர்க்குமிகத் தான்வணங்கும் கையே;
தரணயிலுன் திறமையெலாம்சாற்றல் எளிதலவே!

263. விண்ணப்பம்
1360 பாலைனம் சோலைவன மாகவேண்டும்
     பசுங்கிளிகள் அங்கிருந்து பாடவேண்டும்;
சாலைகளிற் பலதொழிலும் பெருக வேண்டும்;
     சபைகளிலே தமிழெழுந்து முழங்க வேண்டும்;
சீலைஉடை கதருடையாய்த் திகழ வேண்டும்;
     தேசபக்தி செழித்தோங்கி வளர வேண்டும்;
வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிய வேண்டும்
     வெற்றியின்மேல் வெற்றிஎமக் கெய்த வேண்டும்.

1361 கஞ்சாவை நஞ்சாகக் கருத வேண்டும்;
     கள்ளொழுகுங் கடைவாயை மூட வேண்டும்;