பக்கம் எண் :

240கவிமணியின் கவிதைகள்

Untitled Document

  185 எல்லாம் வல்ல எம்பெரு மான்இவள்
குணத்தை அறிந்தே கொடுத்தான் ஒருகண்.
கணகண என்றெக் கணமும் நாக்கின்
அடிக்கும் மணிவிசை அடங்கி விடுமென்று
எவரும் எண்ணி யிருந்ததே யில்லை.

  190 ஊரை முழுதும் நாழியால் அளப்பாள்.
நாட்டை முன்னம் பரியாய் ஆக்கின
நாதனும் கண்டு நாண, இவளும்
யானையைப் பூனை யாக மாற்றுவாள்.

  195 பூனையை யானை போலக் காட்டுவாள்.
ஐயோ! உலகுக் கெங்கள் அருமை
அத்தை திருவிளை யாடலை யெல்லாம்
பத்துப் பரஞ்சோ திகளே பாடினும்
முடியா தென்றால், மூதறி வில்லா

  200 அடியாள் சொல்லி அறியப் படுமோ?
இரக்கம் சிறிதும் இன்றி, எனக்கிவள்
இடுவாள் வேலைகள் இரவும் பகலும்.
குழந்தைக் குப்பால் கொடுக்க வொட்டாள்;
கும்பி யாரக் குடிக்க வொட்டாள்;

  205 உண்ண வொட்டாள் உறங்க வொட்டாள்;
உடலைக் கீழே சரிக்க வொட்டாள்;
அருமை மதினி அடிக்கடி அடிக்கடி
சடைவா றுதற்குத் தாய்வீ டடைவாள்;
மக்களும் பின்னால் வருவர்; புருஷன்

  210 இரண்டொரு நாள்கழிந் தெட்டிப் பார்ப்பான்.
வந்தால், போகும் வரையிலும் என்னை
அம்மியில் வைத்துச் சம்மந்தி யாக
அரைத்து விடுவாள் ஐயம் அதற்கிலை,
என்னிரு மக்களும் இவருக் கேவல்

  215 செய்து செய்து துரும்பாய்த் தேய்ந்தார்.