பக்கம் எண் :

262கவிமணியின் கவிதைகள்

Untitled Document

815   அற்புதம்! அற்புதம்! அற்புதம்! அப்பா!
ஒருகண் வெண்ணையும் ஒருகண் நீறும்
வைப்பதும் உனக்கு வழக்கம் தான், அடா!
இதற்குச் சாத்திரம் எங்கே பார்த்து
வைத்திருக் கின்றீர், மாப்பிள்ளைத் துரையே!

820   போட்டும்;
ஆண்டு தோறும் அறுப்புக் காலம்உன்
நாலாம் மனைவி நாடகக் காரி,
வித்துத் தண்டும் வாளை மீனும்
முருங்கைக் காயும் மொச்சைக் கொட்டையும்

825   வட்டி வட்டியாய் வாங்கி வாங்கிக்
கறிகள் வைத்துக் கஞ்சியும் வைத்து,
கஞ்சியை
ஆற்றி ஆற்றி அரையரை அகப்பையாய்
விட்டுக் கொண்டு, விசிறி எடுத்து

830   வியர்வை மாற வீசிக் கொண்டு,
பற்பல பேச்சிலும் பக்குவ மாக
உண்மையும் பொய்யும் ஒருங்கு கலந்து
காலம் போக்கும் காரணம் இன்னதென்று
அப்ப முத்துநீ அறிவா யோடா?

835   கொட்டுக் குடவைப் புட்டும் தின்று, மேல்
குறுணிக் காப்பியும் குடித்தால் போதுமா?
வீட்டுக் காரியம் விசாரித்து அறிய
மதியில் லாதவன் மனிதனா? மாடா?
சாளையும் சோறும் சண்ணும் சப்பா,

840   களத்துச் சுவரைக் கடந்து போவது
எத்தனை வட்டிநெல் என்றுஅறி வாயோ?
கூடப் பிறந்தவள் கும்பி கொதித்து
வந்துநின் றாலும், மாபா தகன்நீ,
ஆழக்கு நெல்லும் அளித்திடு வாயோ!

845   அலர்தலை யுலகில் அறவழி நில்லா
அரசர் மகுடம் அனைத்தையும் ஒன்றாய்