பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு263

Untitled Document

    அடித்து நொறுக்கி அழலிற் காய்ச்சி
மாசெலாம் அகற்றி வையகம் தொழுதன்
அடியில் இடுஞ்செருப் பாணிகள் ஆக்கவும்,

850   அவர்,
கொடுங்கோல் எல்லாம் குதிரைப் பாகர்
தாங்குதற் குரிய சவுக்குள் ஆக்கவும்,
ஈட்டி வாள் இவை யாவையும் முறித்துப்
பண்பட நிலம் உழு படைகள் ஆக்கவும்

855   கொடிகள் கொற்றக் குடைகள் இவற்றைச்
சிறுசிறு துண்டாய்க் கீறிச் சிறுமியர்
பாவைக்கு அணிபா வாடைகள் ஆக்கவும்,
நாடும் நகரும் நாசம் செய்யும்
பென்னம் பெரிய பீரங் கிகளை

860   இந்திய நாட்டில் இழுத்துக் கொணர்ந்து
செந்நெல் கோதுமை தீங்கரும்பு என்று
பன்னப் படுபல பயிர்களும் ஓங்குநம்
நிலங்களில் என்றும் நீர்வளம் பெருகக்
கங்கை யமுனை காவிரி முதலிய

865   வற்றிலா நதிகளில் மடைகள் ஆக்கவும்,
கங்கணம் கட்டியெம் காவலர் காவலன்
ஐந்தாம் ஜ்யார்ஜாம் அமரா பரணன்
பூதலகம் மீதலம் பாதலம் நடுங்க
ஏம கால தூதரும் இளைக்கக்

870   கடும்போர் செய்யும் இக்கலாந் தன்னில்
காரண வர்களே! காரண வர்களே!
குடும்பந் தோறும் கொடுங்கோ லரசு
நிலைத்திட முயல்வது நீதிதா னாகுமோ?
அது,

875   நீணலத்து இனியொரு நிமிஷம் நிற்குமோ?
ஐயோ! இவர் செய்யும் அநியா யங்களை
அறிபவர் யாரே! அறிபவர் யாரே!
கொடுங்கோ லரசர் குடிகளைப் போல், இக்
காரண வர்களின் கைக்கீழ்த் தங்கி