பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு291

Untitled Document
சுவான தேவர் துதித்து நிற்க,
அந்தரம் எங்கும் பந்தர் போட்டுக்
காக்கையா டினியர் கானம் பாட,
1715 பழஅடி யார்கள் பலரொடும் கூடி
வெட்ட வெளியில் வெண்சோ றுண்டு
பட்டைச் சோறும் பாற்சோ றாக
ஓட்டுத் திண்ணை உறங்கிட மாக
இருப்பதை நோக்கி இரங்கி, இரங்கி,
1720 இழந்ததை எண்ணி ஏங்கி, ஏங்கி,
அழுபவர் கண்ணீர் ஆறாய்ப் போம்வழி -
ஆடுகள் மாடுகட்கு ஆகும் இவ்வழி
மனிதர் செல்லும் வழியா யிடுமோ?
1725 ........................................
.........................................
கற்றவர் உளரோ! கற்றவர் உளரோ!
பெற்ற மக்களைப் பேணி வளர்த்திடாக்
கற்றவர் உறரோ! கற்றவர் உளரோ!!

1730 அறிஞரும் உளரோ! அறிஞரும் உளரோ!
வறுமைக்கு இரையாய் மக்களை விட்டிடும்
அறிஞரும் உளரோ! அறிஞரும் உளரோ!
நீதியும் உளதோ! நீதியும் உளதோ!
மாதர் கண்ணீர் மாறா நிலத்தில்
1735 நீதியும் உளதோ! நீதியும் உளதோ!!
தெய்வமும் உளதோ! தெய்வமும் உளதோ!
பொய்வழிப் பொருளைப் போக்கும் இந்நிலத்தில்
1738 தெய்வமும் உளதோ! தெய்வமும் உளதோ!

வெண்பா
1407 காரணவன் .... தேப்போகல்யாணம் செய்வதெப்போ
வாரமிகு மக்களொடு வாழ்வதெப்போ - தாரணியில்
எல்லா ரையும்போல் இருப்பதெப்போ...
1742 ..................................................... நாம்.