பக்கம் எண் :

308கவிமணியின் கவிதைகள்

Untitled Document
1486 சந்தேகம் வேண்டாம் - அதனைத்
தரமு டியாதப்பா!
எந்த உயிரையும் - காப்பது
என் கடமையப்பா!
42
1487 சாற்றும் உரைகேட்டுத் - தேவ
தத்தனும் ஓடிவந்து,
சீற்றம் எழுந்தவனாய் - நின்று
செப்பும் மொழியிதுவாம்;
43
1488 "மடிய நேர்ந்தாலும் உயிர்த்து
வாழ நேர்ந்தாலும்,
படியில் வீழ்ந்திடுமேல் - பறவை
பாணம் எய்ந்தவர்க்காம்.
44
1489 என்கை அம்பினால் - விழுந்த
இப்ப றவையினை,
சங்கை இல்லாமல் - இங்கே
தந்திடுவாய், ஐயா! "
45
1490 சொன்ன மொழிகேட்டான் - ஐயன்
துன்பம் மிகஅடைந்தான்;
அன்னப் பறவையினைக் - கன்னத்தோடு
அணைத்து வைத்துக் கொண்டான்.
46
1491 பாரில் உயிரையெல்லாம் - அருளால்
பாது காக்கவந்தோன்,
சீரிய நன்மொழிகள் - உள்ளம்
தெளிந்து கூறுகின்றான்;
47
1492 "இல்லை இல்லையா! - பறவை
என்பறவை, ஐயா!
வல்லடி வழக்கு - நீயும்
வளர்க்க வேண்டாம், ஐயா!
48
1493 தொல்லு லகமெல்லாம் - அருளால்
சொந்த மாக்கவந்தேன்;
வெல்லும் பொருள்களில் - முதலில்
வென்ற பொருளிதாம்,
49