பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு309

Untitled Document
1494 எம்ம னிதருமே - உளத்தில்
இரக்க முற்றிடயான்,
செம்மை நெறியினை - நன்கு
தெரிந்து கூறிடுவேன்.
50
1495 துன்பம் அண்டாமல் - அதனைத்
துரத்தி ஓட்டிடுவேன்;
இன்பம் இவ்வுலகில் - நிலைக்க
என்றும் வென்றிடுவேன்!
51
1496 மனிதர் மட்டுமல்ல - உலகில்
வாழும் எவ்வுயிரும்,
இனிய வாழ்வடையும் - வழியை
இனிது காட்டிடுவேன்.,
52
1497 என்னு ரைகளை நீ - மறுக்கின்,
இன்றே இப்பொழுதே,
மன்னும் நீதிமன்றம் - ஏறி
வழக்கு ரைப்போம், ஐயா!
53
வேறு
1498 இருவரும் அப்பால் இசையா ராகி,
அறநூல் கற்றோர் அறிவிற் பெரியோர்,
நடுநிலை நீதி நன்கு கண்டோர்
கூடிய மன்றில் குறைகொண்டு ஏகினர்.
ஏகவே,
வழுவற இருதலை வழக்கும் கேட்டு,
மன்றுளோர் தம்முள் வாதம் செய்தனர்;
இதுவே நீதியென்று இயம்பினர் சிலரே;
அதுவே நீதியென்று அறைந்தனர் சிலரே;
யாதும் துணியாது இருந்தனர் சிலரே;
முடிவில்,
இந்நாள் வரையிலும் எவருமே அறியாப்
புலமை மிக்க புரோகிதன் ஒருவன்,
எழுந்து நின்று, யாவருங் கேட்க,
54