| முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 33 |
Untitled Document
| 177. | | 'சின்னஞ் சிறுகிளி' - கனவில் தினமும் காணுதடா! கன்னங் குழியவே - முத்தமும் கனிந்த ளிக்குதடா! |
| 178. | | 'கண்ணன் காதலன்' - எனக்கொரு களிய முதமடா! விண்ண முதமுமே - அதனை வெல்ல மாட்டாதடா! |
| 179. | | 'குயிலின் பாட்டி'லே - காதல் கொப்பு ளிக்குதடா! செயல்ம றந்தேனடா - லாகிரி சிரசிற் கொண்டதடா! |
| 180. | | 'சுதந்திரப் பாட்டில்' - உள்ளம் துடிது டிக்குதடா! பதமெழும்புதடா! - கையும் படப டக்குதடா! |
| 181. | | 'தொண்டு செய்யுமடிமை' - என்னும் சுடுச ரம்ஓடி, மண்டையைத் தாக்குதடா! - நெஞ்சம் மடியப் பாயுதடா! |
| 182 | | பெண்டுபிள்ளைகளின் - பெருமை பெரித றிந்தேனடா! சண்டைகள் செய்ததெல்லாம் - எண்ணித் தலைக வீழ்ந்தேனடா! |
| 183 | | ஏழை துயரெல்லாம் - அவனும் எடுத்த டுக்கையிலே, மூளை கலங்குதடா! - விம்மி மூச்சும் முட்டுதடா! |
| 184 | | பாவின் நயமெல்லாம் - யானும் பகர வல்லேனோ? ஆவின் பாற்சுவையை - நாழி அளந்து காட்டிடுமோ? | |
|
|