| 1591 | | வாரும் விரும்புவ தின்னுயிராம் - அவர் என்றுமே காப்பதும் அன்னதேயாம்; பாரில் எறும்பும் உயிர்பிழைக்கப் - படும்; பாடு முழுதும் அறிந்திலீரோ? | 147 |
| 1592 | | நேரிய உள்ளம் இரங்கிடுமேல் - இந்த நீள்நிலம் முற்றுமே ஆண்டிடலாம்; பாரினில் மாரி பொழிந்திடவே - வயல் பக்குவ மாவ தறிந்தலீரோ? | 148 |
| 1593 | | காட்டும் கருணை யுடையவரே - என்றும் கண்ணிய வாழ்வை உடையவராம்; வாட்டும் உலகில் வருந்திடுவார் - இந்த மர்மம் அறியாத மூடரையா! | 149 |
| 1594 | | ஆட்டின் கழுத்தை அறுத்துப் பொசுக்கிநீர் ஆக்கிய யாகத்து அவியுணவை ஈட்டும் கருணை இறைவர் கைகளில் ஏந்திப் புசிப்பரே? கூறுமையா! | 150 |
| 1595 | | மைந்தருள் ஊமை மகனை ஒருமகன் வாளால் அரிந்து கறிசமைத்தால் தந்தையும் கண்டு களிப்பதுண்டோ? - இதைச் சற்றுநீர் சோசித்துப் பாருமையா! | 151 |
| 1596 | | காடு மலையெலாம் மேய்ந்து வந்து - ஆடுதன் கன்று வருந்திடப் பாலையெல்லாம் தேடிஉம் மக்களை ஊட்டுவதும் ஒரு தீய செயலென எண்ணினீரோ? | 152 |
| 1597 | | மேடையில் நீங்களும் மூடிப் படுத்திட மெல்லிய கம்பளி தானளித்து வாடையி லாடிக் கொடுகுவதும் - அதன் வஞ்சகச் செய்கையோ, சொல்லும்ஐயா? | 153 |
| 1598 | | அம்புவி மீதில்இவ் வாடுகளும் - உம்மை அண்டிப் பிழைக்கும் உயிரலவோ? நம்பி யிருப்பவர் கும்பி எரிந்திடில் நன்மை உமக்கு வருமோ ஐயா? | 154 |