| 1599 | | காட்டுப் புலியின் கொடுமையஞ்சி - உங்கள் கால்நிழல் தங்கிய ஆடுகளை நாட்டுப் புலியென் கொல்லுவதோ? - அந்த நான்மறை போற்றிய நீதிஐயா? | 155 |
| 1600 | | மண்ணில் வளர்ந்திடும் புல்லையுண்ணும் - வான மாரி பொழிந்திடும் நீரையுண்ணும்; எண்ணிநீர் செய்யும் உதவியென்னாம் - இதை ஏனோ உணர்ந்திலீர் மானிடரே! | 156 |
| 1601 | | பிள்ளையைக் கொன்று கறி சமைத்தீர் - அதன் பெற்றோரை உண்ண அழைத்துநின்றீர்; வள்ளலே உள்ளந் தெளிந்தவரே - இது வாழ்வை யளிக்கும் செயலமோ? | 157 |
| 1602 | | மன்னுயி ரெல்லாம் உலகில் - ஒருதாயின் மக்களென் றுண்மை அறிந்திலீரோ? தன்னுயிர் போற்றிப் பெரும்பழி செய்வது சண்டாளர் கண்ட நெறியலவோ? | 158 |
| 1603 | | மாண்ட மனிதனோர் ஆடுமாவான் - உடல் மாறியோர் ஆடும் மனிதனாகும்; நீண்ட உலகின் இயற்கைஐயா! - இது நீதி நூல் கண்டிடும் உண்மைஐயா! | 159 |
| 1604 | | பாரில் உதிரம் குளிப்பதனால் - ஒரு பாவமும் நீங்குவ தில்லைஐயா! சீரியதேவரும் இச்செயல் - கண்டுதம் சிந்தை களித்திட மாட்டாரையா! | 160 |
| 1605 | | தாயென நம்பி வரும்உயிரை - யாக சாலை நடுவில் கிடத்திஒரு பேயெனக் கீறிப் பிளப்பதனால் - என்ன பேறும் பெயரையும் பெற்றீரையா? | 161 |
| 1606 | | துட்டப் பிசாசைக் குறித்திடினும் - இந்தத் தூண்டிலில் வந்த தகப்படுமோ? வெட்டிக் கொலைசெய்ய வேண்டாமையா! - இதை விட்டொழிதல் மிக்க மேன்மைஐயா! | 162 |