| 1607 | | ஆயிரம் பாவங்கள் செய்தவெல்லாம் - ஏழை ஆட்டின் தலையோடு அகன்றிடுமோ? தீயவும் நல்லவும் செய்தவரை - விட்டுச் செல்வ தொருநாளு மில்லைஐயா! | 163 |
| 1608 | | முன்னைப் பிறப்பினில் செய்தவினை - யாவும் முற்றி முதிர்ந்து முளைந்தெழுந்து பின்னைப் பிறப்பில் வளர்ந்திடும் என்பது பித்தர் உரையென எண்ணினீரோ? | 164 |
| 1609 | | நெஞ்சினில் வாயில் கையினில் - செய்திடும் நீதி அநீதிகள் யாவையுமே வஞ்சமி லாது மறுபிறப்பில் - உம்மை வந்து பொருந்தாமற் போயிடுமோ? | 165 |
| 1610 | | கன்று பசுவை மறந்திடினும் - செய்த கருமங்கள் உம்மை விடுமோ ஐயா! கொன்று பழிதேட வேண்டாம்ஐயா; - இனிக் கொல்லா விரதம்மேற் கொள்ளும் ஐயா! | 166 |
| 1611 | | தானியம் பற்பல தாமிலையோ? - சுவை தாங்கிய காய்கனி தாமிலையோ? வான மழைதரு நீரிலையோ? - இவை வாழ்ந்திடப் போதும் உணவல்வோ? | 167 |
| 1612 | | ஊனுண வின்றி உறவு கொண்டு - நிலத்து உள்ளதை யாவரும் உண்டிருந்தால் மானும் புலியும் ஒருதுறையில் - நீரை வந்து குடிப்பதும் காணலாமே | 168 |
| 1613 | | ஆதலால், தீவினை செய்யவேண்டாம் - ஏழை ஆட்டின் உயிரையும் வாங்கவேண்டாம், பூதலந் தன்னை நரகம தாக்கிடும் புத்தியை விட்டுப் பிழையும், ஐயா!” | 169 |