| முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 341 |
Untitled Document
| 1615 | | தீக்ஷிதரும் வாளை விட்டெறிந்தார் - ஓமத் தீயெரி குண்டம் அழித்துவிட்டார்; மோக்ஷம் இவையுந் தருமோ என்றார் மூர்த்தியின் பாதம் பணிந்து நின்றார். | 171 |
| 1616 | | “செய்பிழை யாவும் பொறுத்தருள்வீர்” - எனச் சேவித்து மன்னனும் தாழ்ந்து நின்றான்; “ஐயனே நாட்டில் கொலைதவிர்த்து - நாளை ஆணையும் கட்டுவேன்” என்றுரைத்தான். | 172 |
| 1617 | | “மன்னயி ரெல்லாம் தன்னுயிர் போல நிலமுழு தாளும் நெடுமுடி யண்ணல் பிம்பி சாரப் பெரும்பெயர் வேந்தன், மெய்யகங் கண்டுஇவ் வையகம் உய்ந்திடத் திருவருள் புரிந்த செய்தி இதுவாம்; யாக சாலையில் பக்குவம் செய்தும் யாக சாலையில் எரிவாய் ஊட்டியும் பலவா முயிரின் குலம்வே ரறுத்தல் பழியும் பாவமும் பயக்கும் செயலாம். ஆதலின், ஊனை உண்பதும் உயிர்க்கொலை புரிவதும் இந்நாள் முதல்இந் நன்னாட் டெல்லையில் இல்லா தொழிக; ஈதுஎம் ஆணை! அருளடை யோர்க்கே அருளும் உறுதுணை யாமென்று உளங்கொள் வீரே.” | 173 |
| 1618 | | மந்திர வோலை எழுதுபவர் - அந்த மன்னவன் ஆணைஇம் மாநிலத்தில் சந்திர சூரியர் உள்ளளவும் - நிலை தந்தி டச் சாசனம் கண்டாரம்மா! | 174 | |
|
|