Untitled Document
| 1666 | | மங்கைமனத் தெளிவையெலாம் உரைத்த உண்மை வார்த்தையினால் அறிந்தவளை நோக்கி, “அம்மா எங்குமிலாப் பொருள்தேடச் சென்று நீயும் யான்நினைத்த பொருளதனைப் பெற்று வந்தாய் தங்குமிந்த உலகியற்கை மாறா தம்மா! தனயனைநீ எண்ணிமனம் தளர வேண்டாம்; அங்கமெலாம் வாயாக அழுதிட் டாலும் அவனெழுந்து நின்துயரம் அகற்ற லுண்டோ? | 223 |
| 1667 | | “பசும்புல் லடர்ந்து பன்மலர் விரிந்து விசும்பு மண்ணில் விழுந்த தோவெனக் கண்டவர் ஐயுறு காட்சிய தாகி மண்டல வளமெலாம் மலிந்து தங்குமிப் புலத்தின் வழிமன் புரமது சென்று கொலைக்கள வேண்டிக் குண்டினுக் கிரையாய் ஆவரை அறியும் அறிவிலா ஆட்டினைப் பாவிக ளோட்டும் இப்பரிசு போல, ஆசையும், இன்ப விழியில் இதமா யிழுத்துத் துன்பமென்னும் தொடக்கில் மன்பதை யுலகை மாட்டி விடுமே. | 224 |
| 1668 | | “இம்மா நிலத்தில் வுண்மையெலாம் யானும் அறியச் செல்கின்றேன்; அம்மா நீயும் உன்மகனை அடக்கம் செய்போ” என்றுரைத்தான் | 225 |
| 1669 | | வெம்மா வினையின் வேர றுத்து விளங்கும் ஞான ஒளிகண்டிங்கு எம்மா தவருந் தொழுதேத்த எழிலார் கமலத்து எழுந்தோனே. | 226 | |
|
|