பக்கம் எண் :

372கவிமணியின் கவிதைகள்

Untitled Document
1714 மண்ணுக் கீடு பொன்கேட்டால்
     வலியில் மனிதர் என்செய்வார்?
கண்ணிச் செய்த ஒப்பந்தம்
     கண்ணிற் கண்டது ஒன்றுமிலை;
திண்ணமாக இவ்வழக்குத்
     தீரா வழக்கே யாகும், அப்பா!
எண்ணி முடிவு செய்திடுவார்
     யாவர் உள்ளார்? எங்குள்ளார்?
45

1715 எல்லாம் வலியாய், நின்வலிதான்
     எங்கும் வெளியாம் வேளையிலே,
நல்லாறு அறியா நாத்திகரும்
     நம்பி உனையே நாடிடுவார்;
வில்லார் கதிரோன் விண்ணின்று
     விளங்கி ஒளியைப் பொழிகையிலே,
பொல்லா வாவல் இருள்நோக்கிய
     போக வழிதான் கண்டிடுமோ?
46

1716 ‘யாரும் சிறியர்; யான்பெரியன்;
     எதிலும் சிறந்தது என்னலமாம்;
பாரில் எனக்கீ டில்லை’ எனப்
     பயனில் மொழிகள் பகர்வதும்என்?
சேரும் உலகப் பொருளையெலாம்,
     தெரிய நோக்கித் தனைநோக்காச்
சீரின் அமைந்த கண்மணியின்
     செயலை நோக்கித் தெளிவீரே.
47

1717 அல்லும் பகலும் பலநூல்கள்
     ஆய்ந்து கற்றேன்; அவையாவும்
வெல்லும் வெற்றி ஈகையினால்
     விளைந்த புகழை விரித்ததலால்,
தொல்லை ஆன்ம நிலையிதெனச்
     சொன்ன சொற்கள் ஒன்றுமிலை
கல்லும் முள்ளும் கடந்துழன்றும்
     கனியைக் கண்ணால் கண்டிலனே!
48