பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு373

Untitled Document
1718 ஐயோ அறியா மானிடரே!
     ஆசைப் பேயின் அடிமைகளே!
எய்யா தென்றும் வான்நோக்கி,
     இரங்கி அழுது நிற்பதும் ஏன்?
மெய்யாய் அன்று படைத்தஅவன்
     மெலியாது உம்மைக் காவானோ?
கையால் மரத்தை நட்டவர்கள்
     கருத்தாய் நீரும் வார்க்காரோ?
49

1719 ‘ஈசா! உள்ள மிரங்கிடு; யான்
     ஏழை, ஏழை, என்றுநிதம்
கூசா தேனோ கூப்பிடுவாய்?
     குறைகள் கூறி நின்றிடுவாய்?
பேசா தவரைப் பேணானோ?
     பெற்ற மகவைக் காவானோ?
ஆசான் நீயோ? ஈசனெதும்
     அறியாச் சிறிய பாலகனோ?
50

1720 நாடும் வெற்றி தோல்விகள்எந்
     நாளும் பந்து விரும்பிடுமோ?
ஆடுமவரின் அடிக்கேற்ப
     அங்கும் இங்கும் அலைந்திடுமால்;
நீடும் இந்த நிலமீது
     நின்னைத் தூக்கி இட்டஅவன்
ஈடு செய்வான், இரங்கிடுவான்,
     யாவும் அறிவான், நன்கறிவான்.
51

1721 எல்லாம் இங்கோர் சூதாட்டம்,
     இரவும் பகலும் மாறாட்டம்;
வல்லான் விதியே ஆடுமகன்,
     வலியில் மனிதர் கருவிகளாம்;
சொல்லா தெங்கும் இழுத்திடுவான்,
     ஜோடி சேர்ப்பான், வெட்டிடுவான்;
செல்லா தாக்கி ஒவ்வொன்றாய்த்
     திரும்ப அறையில் இட்டிடுவான்.
52