பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு419

Untitled Document
அநுபல்லவி
வீடும் குடியுமில்லை,
     விளைநிலம் ஏதுமில்லை;
தேடி அடையவழி
     தெரியவும் இல்லையென்று
(வாடி)
சரணம்
ஈக்கள் எறும்புகளை
     எண்ணிலா உயிர்களைக்
காக்கும் கருணாகரன்
     கனகசபை நடேசன்
ஆக்கம் பெருகஉனக்
     கருள்செய்யா திருப்பானோ?
பாக்களில் அவன்புகழ்
     பாடிப் பணிந்திடாமல்
(வாடி)
அஞ்சிய வானவருக்
     கரிய அமுதளித்து,
நஞ்சினையுண்ட ஈசன்
     நமக்கருள் செய்திடானோ?
குஞ்சித பாதமலர்
     கும்பிட் டெனக்குநீயே
தஞ்சமென அவனைத்
     தாழ்ந்து பணிந்திடாமல்
(வாடி)
40. குமரி பகவதி

இராகம் - கல்யாணி     தாளம் - சாபு

பல்லவி

1824 ஒருவரம் அருள்வாய யம்மா! - உளமிரங்கி
     ஒருவரம் அருள்வா யம்மா!
 

அநுபல்லவி

  கருவிலினும் புகாமல்
     கவலைக்கும் ஆளாகாமல்
திருவடி போற்றியுன்னைத்
     தினம் தினம் தொழுதுய்ய
(ஒரு வரம்)