பக்கம் எண் :

422கவிமணியின் கவிதைகள்

Untitled Document
44. வந்தனை செய்வோம்

இராகம் - ஸம்ஸ்த்வனி     தாளம் - ஆதி

பல்லவி
1828 வந்தனை செய்வோமே!  - மலரடி
     வாழ்த்தி வணங்கு வோமே!
 
அநுபல்லவி
சிந்தனை செய்யு முன்னம்
     வந்தெனக் கருள் செய்யும்
தந்தி முகனைச் சிவ
     சங்கரன் மைந்தனை
(வந்தனை)

சரணம்

  இன்னமு தொழுகும் இசை - தமிழிசை
     இந்நிலத் தோங் கிடவே
கன்னல் முக்கனி அவல்"
     கடலைமோ தகமெலாம்
சந்நிதி முன்படைத்துத்
     தாழ்ந்து தலைகுனிந்து
(வந்தனை)


45. ஆதி விநாயகன்

இராகம் - ஸௌராஷ்ட்ரம்     தாளம் - ஆதி

1829 கங்கையும் வெண்பிறை யுஞ்சடை சூடிய
     கண்ணுதல் நீயேயாம்;
சங்கமும் ஆழியும் அங்கையில் ஏந்திய
     தண்முகில் நீயேயாம்;
மங்கல மாமறை ஓதி மகிழ்ந்திடும்
     மலரவன் நீயேயாம்;
ஐங்கர னே! எமை ஆண்டருள் ஐயனே!
     ஆதி விநாயகனே!