| முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 423 |
Untitled Document
| இராகம் - பிலகரி | | | தாளம் - ரூபகம் |
| 1830 | | திங்களொடு கங்கைமுடி சேர்த்தசிவன் நீயே! திருபுரங்கள் நீறுபடப் பார்த்தசிவன் நீயே! சங்கினொடு சக்கரங்கை தாங்கியமால் நீயே! தசமுகனைப் போரிலுயிர் வாங்கியமால் நீயே! நங்கைகலை மங்கைதவழ் நாவின் அயன் நீயே! நாரணனார் உந்திதரு பூவினயன் நீயே! எங்குமுள பரம்பொருளே! என்றுமுள பொருளே! யானைமுகப் பொருளே! வந் தேழைஎனக் கருளே! | |
| இராகம் - சங்கராபரணம் | | | தாளம் - ஆதி |
| 1831 | | தஞ்ச மெனக்கு நீயே! தயவு செய்வாய் தாயே! | |
| | | குஞ்சர வதனனைக் குமரனை ஈன்றாள் அஞ்சனி! அபிராமி! அழகி! பர மேச்வரி! | (தஞ்ச) | |
|
|