பக்கம் எண் :

424கவிமணியின் கவிதைகள்

Untitled Document
சரணம்
அம்பிகை! மனோன்மணி!
     அமிர்த குணசுந்தரி!
உம்பர் பணியும் தேவி!
     உத்தமி! சிவகாமி!
வெம்பவம் போக்கிடும்
     வேதநாயகி! கௌரி!
நம்பியுன் மலர்ப்பதம்
     கும்பிடு கின்றேன்நிதம்
(தஞ்ச)
48. அறவாழி அந்தணன்
இராகம் - கேதாரம்                 தாளம் - ரூபகம்
பல்லவி
1832 மறவா திருப்பா யென்மனமே! - என்றும்
     மறவா திரருப்பா யென்மனமே! 
 அநுபல்லவி
அறவாழி அந்தணனை
     ஆதி பகவனை நீ
(மறவா)
சரணம்
பிறவிப் பெருங்கடலைநீந்தி - அப்பால்
     பேரின்ப வீடடையவேண்டின்,
இறைவன் தனக்குவமை
     இல்லான் எண்குணத்தானை
(மறவா)
49. எங்கும் நிறைந்தவன்
இராகம் - லலிதாங்கி                  தாளம் - ஆதி
பல்லவி
1833 கூறா தறிந்திடாயோ? - என்றன்
     குறைக ளனைத்தையும் நான்
உன்பால் எடுத்துக்