பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு429

Untitled Document
சரணம்

       பட்டம் பதவிகட்கும்
     பணத்துக்கு மேயென்றும்
     பாரினில் பாடுபட்டேன் - வீணாய்ப்
     பாரனில் பாடுபட்டேன்,
சிட்டருடனே கூடித்
     திருப்புகழ் பாடியுனை
     இட்டகுல தெய்வமென்
றெண்ணிப் பணிந்தறியேன்,
     தட்டழிந்திடு கீரன்
     சாற்றிய தமிழ்க்கருள்
     சண்முகனே! செந்தில்
     சரவண பவனே!
(ஆயிரம்)

56. என்ன செய்குவேன்?

இராகம் - அடாணா     தாளம் - ஆதி

பல்லவி

1840 ஏதும் அறியாரைப்போல்
     இருந்திடில் எளியேன் நான்
என்ன செய்குவேன்! ஐயா!
 

அநுபல்லவி

  ஆதி சிவன்மகன்நீ!
     அகிலலோக நாயகன்நீ!
சோதி வடிவேலன் நீ!
     சூரசம் மாரன்நீ!
(ஏதும்)

சரணம்

  பொய்யும் மெய் யுமேநிதம்
     போரிடும் இப் புவியில்
புத்தி மயங்கி நின்றேன்,
     செய்யும் பிழை பொறுத்துச்