பக்கம் எண் :

430கவிமணியின் கவிதைகள்

Untitled Document
சித்தம் இரங்கி யெனக்
     குய்யும் வழிய ருளல்
உன் கடன் அல்லவோ?
     ஆழியோ பிறவிப் பே-
(ஏதும்)
ராழி, அலைகள் மோதும்
     ஆழி, இதன் நடுவே
சூழும் புயலெ ழுந்து
     சுற்றிச் சுழலும் வேளை,
ஏழை விடுங் கலத்துக்
     கெவரும் துணைவே றுண்டோ?
(ஏதும்)
57. ஆதிப் பொதுமறை
இராகம் - சக்கரவாகம்              தாளம் - ஆதி
பல்லவி
1841 ஆதிப் பொதுமறையை - அனுதினம்
     ஓதிப் பழகு வமே.
அநுபல்லவி
ஜாதி மதபேதம் ஏதுமிலாநடு
     நீதியை எங்கும் நிலை நிறுத்தவந்த
(ஆதிப்)
சரணம்
தெய்வப் பெரும் புலவன் - தமிழ் நிலம்
     செய்தவத் தால்பிறந்தோன்;
ஐயந் திரிபற உண்மை அறிந்தவன்
     வையம் புகழ்திரு வள்ளுவன் பாடிய
(ஆதிப்)
பள்ளிச் சிறுவரொடு - சிறுமியர்
     பண்டிதர் பாமரரும்,
உள்ளக் களிப்புடன்
     ஒன்றாகக் கூடியே
தெள்ளத் தெளிந்த
     குரலில் தெருவெல்லாம்
(ஆதிப்)