பக்கம் எண் :

432கவிமணியின் கவிதைகள்

Untitled Document
59. தில்லையப்பன்

இராகம் - கரஹரப்ரியா     தாளம் - ஆதி

பல்லவி
1843 சொன்ன தெல்லாம் மறந்தாரோ? - என்னைச்
     சோதனை செய்யத் துணிந்தாரோ?
அநுபல்லவி
செந்நெற் கழனி சூழும்
     தில்லைப் பதியார் அன்ற
கன்னம் குழிய முத்தம்
     கனிந்து கனிந் தளித்துச்
(சொன்ன)
சரணம்
வருவார் வருவார் என்று நித்தம் - வரும்
     வழிமேல் விழியாய் நின்றேன், தோழி!
ஒருவாரம் ஒருமாதம்
     ஒருவருஷமும் போச்சே,
ஒருத்தி கிருக்கிஎன்றிவ்
     வூரும்சிரிக்க லாச்சே
(சொன்ன)
60. சல்ல சகுனம்

இராகம் - ஷண்முகப்ரியா     தாளம் - ஆதிபல்லவி

1844 நல்ல சகுணம் நோக்கிச் செல்லடி! - சென்று
     நான்படும் பாடவர்க்குச் சொல்லடி!
 

அநுபல்லவி

  அல்லல் அகற்றி அன்பர்க்
     கானந்தம் அருள் நேசர்,
தில்லைப் பதி நடேசர்
     திருவுள்ளம் அறிய நீ!
(நல்ல)