| முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 445 |
Untitled Document
(38) உமையொருபாகக் குருக்கள் உமையொருபாகக் குருக்கள் என்னும் சைவ அடியவரிடம் கவிமணி சிவதீட்சை பெற்ற காலத்தில் (1895-1900) பாடியது இது. இங்குக் குறிப்பிடப்படும் உமையொருபாகக் குருக்கள் நாஞ்சில் நாட்டு வேளாளர்கள் சிலருக்கும் சிவதீட்சை கொடுத்திருக்கிறார். இவர் கவிமணியின் சொந்த ஊரான தேரூர் வாணன்திட்டு மடத்தில் சில ஆண்டுகள் இருந்திருக்கிறார். ஸ்ரீவைகுண்டம் மடத்துடன் தொடர்புடையவர்இவர். இவர் பெயரால் தேரூரில் ஒரு மடம் உள்ளது. எட்கார் தர்ஸ்டன்இவரை நாஞ்சில் நாட்டு வேளாளரின் குரு என்று கூறுகிறார். மருமக்கள் வழி மான்மியத்தில் இவர் “உலகெலாம் புகழும் உமையொருபாகக் குருக்கள்” (வரி 1610-11) எனக் குறிக்கப்படுகிறார். (54-72) ஞான உபதேசம் இது ஸ்ரீராமப்பிரசாத் ஸென் பாடிய The foolishness ofSacrifice என்னும் பாடலைத் தழுவியது. (An Anthology of Indian Literature Ed. K. Santhanam 1969) - (டாக்டர் தே.வேலப்பன் அவர்களுடன் உரையாடிய போது கிடைத்த தகவல்) (96-97) சாரதா தேவி ‘கலைமகள்’ : 1949 (104-105) சுவாமி சிவானந்தா ம.மா.தொ.இ. பாடல்கள். கை.எ.பி; எழுதிய நாள் 19-6-1954. ரிஷிகேசம் சிவானந்த சுவாமியின் அறுபது ஆண்டு விழாவிற்காக எழுதப்பட்டது என்ற குறிப்பு உள்ளது.
(106) உரையாசிரியர்
இப்பாடல், மலரும் மாலையும் தொகுதியில் ‘யார் பெரியர்’ என்னும் தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. கை.எ. பிரதியில் இதற்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு ‘உரையாசிரியர்’. (108-113) கவிதை ‘சக்தி’ (1948) பு.பெ. ஐயம்பிள்ளை (119) தமிழிசை இதே பாட்டு ‘தேவியின் கீர்த்தனங்கள்’ தொகுதியில் ‘தமிழிசை’ என்னும் தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. | |
|
|