பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு449

Untitled Document

601 - 603 மூன்று விஷயங்கள்

     பிளேக்கின் ஆங்கிலக் கவிதையைத் தழுவிய பாடல்கள்.604 - 611
பறவையின்           சிந்தனை முட்டையில் கருவாய் இருந்தபொழுது
கூட்டினளவாகவும், சிறு பறவையான    பொழுது தழை கொடிகளாகவும்,
பெரும் பறவையாகி            வெளியில் சஞ்சரிக்கத் தொடங்கியபின்,இன்னதென்று         உண்மையறியாதபடி நீல நிறமாகவும் இவ்வுலகம்
பறவைக்குத் தோன்றியது.       அதுபோல மனிதனும் பருவத்துக்கேற்ற
அறிவுடையவனாயிருக்கிறான்.       உலக அனுபவம் முதிரும் பொழுது
உண்மை ஞானம்         உதயமாகிறது. இப்பாடல்களில், பறவை தனது
அனுபவத்தைக் கூறுகிறது.

612 - 627 குருட்டுப் பையன்

     ‘காலே ஸீப்பன்’ ஆங்கிலக் கவிதைகளின் தழுவல்.

     கண் தெரியாததால்       குருடர் மிக்க மனவருத்தமுடையவராய்
இருப்பரென்று நாம் எண்ணுகிறோம். ஆனால், பிறவிக் குருடர், பார்வை
இன்னதென்று ஒரு பொழுதும்   அறியப் போவதில்லை. ஆதலில் அவர்
கண்ணில்லாமையை ஒரு    குறையாக எண்ணாமல், பின்வரும் பாட்டில்
கூறியுள்ள குருட்டு வாலிபனைப் போல எண்ணவும் கூடும்.

618 மலையும் அணிலும்

     Ralph Waldo Emerson     என்பவரின் The Home Book of
Verses என்ற நூலில் உள்ள ஒரு பாடலைத் தழுவியது.

619 அழியா உயிர்ப்பு

     சுத்தானந்த பாரதியின் ஒரு பிரஞ்சு மொழிக் கவிதையின் கருத்தை
ஒட்டியது.

620 - 626 உண்மை கண்டவர் யார்

     ‘கலைத்கதிர்’ பொங்கல் மலர் 1951

    . முந்திய தலைப்பு ‘கண்டவர் யார்’. இது ஒரு ஆங்கிலகவிதையைத் தழுவியது என்னும் குறிப்பு ‘கலைக் கதிர்’ இதழில்  உள்ளது.627 - 632
அமிழ்ந்துறையும்              மணிகள் ‘கலைமகள்’ 1949 பெப்ரவரி;
இக்கவிதைகளுக்குப் படங்கள் உண்டு. ஓவியம் சுப்பு.