Untitled Document
எழுதினார் என்று தெரிகிறது. இதே பாடல்கள் பின்னர் பல திருத்தங்களுக்கு ஆளாயிருக்கின்றன.” (தே. வேலப்பன் 1996 ப.41) பெரும்பாலும், இப்பாடல்கள் சுடலைமுத்துப் பிள்ளை எழுதி, கவிமணி திருத்தியதாக இருக்கலாம். (முதுபெரும்புலவர் சதாசிவம் பிள்ளையுடன் உரையாடிய போது கிடைத்ததகவல்)
489 புல்
‘லக்ஷ்மி’ 1924 ஜு ன் 543 - 563 இயற்கை வாழ்வு தற்கால உலகில் காணும் பலவிதக் குழப்பங்களாலும்அநீதிகளாலும் புலவனுக்கு மனித வாழ்வில் வெறுப்பு உண்டாகிறது. ஒருநாள் அவன் தன் ஊருக்கு அருகில் உள்ள சோலையில் சென்று பலவிஷயங்களையும் எண்ணிக்கொண்டு படுத்திருக்கிறான். அப்பொழுது அங்குள்ளமரங்களில் தங்கியிருக்கும் பறவைகள் ஆனந்தமாய்க் பாடிக்கொண்டிருக்கின்றன. அதைக் கேட்டதும் அவன் உள்ளத்திலே பின்வரும் எண்ணங்கள் எழுகின்றன. 564 - 567 தாய் கண்ட கனவு
நான் என் மகன் உமரை அவன் இறந்த ஒன்பதாம் நாள் இரவு கனவில் கண்டேன். அப்பொழுது அவன் ஊக்கமும் உற்சாகமும் உடையவனாகக் காணப்பட்டான். அவனைக் கண்டவுடன் முன் வழக்கம் போல், “கடவுளே உமரைக் காப்பாற்றுவாய்” என்று பிரார்த்தனை செய்தேன். ஆனால் அது அப்பொழுது அவனுக்குப் பிடிக்கவில்லை. கோபங்கொண்டு பின்வருமாறு கூறினான்.
‘வசந்தம்’; ஆண்டுமலர்; 1949 568 - 573 வாழ்க்கைத் தத்துவங்கள் ‘பாரதி’; 1933 செப் - அக்டோபர் இதழ்; முந்திய தலைப்பு ‘ஊன்றி உணர்தற்குரிய உண்மைகள்.’ 576 - 587 குழந்தை
George Macdonald என்பவரின் Baby என்ற தலைப்பில் உள்ள Where did you come from baby dear எனத் தொடங்கும் பாடலின் தழுவலாகும். 588 - 600 முதல் துயரம்
‘பெலீஷீபா ஹிமன்ஸ்’ என்னும் பெண் கவிஞர் பாடிய ஆங்கிலப் பாடலைத் தழுவியவை. | |
|
|