பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு447

Untitled Document

266-271 பாண்டியாடுதல்

     ‘கண்ணன்’ தீபாவளி மலர் 1950.   முந்திய தலைப்பு “பாண்டியாட
வாராயோ”

272 இயற்கை

      1943 அளவில் நாகர்கோவில் பேராசிரியர் வீரபத்திரன்செட்டியார்
வீட்டில் வைத்து எழுதியது. (முதுபெரும்புலவர் சதாசிவம் பிள்ளை கூறிய தகவல்)

278-285 - ஆறு

     Goodrich என்பவர்        எழுதிய ஆங்கிலப் பாடலைத் தழுவி
எழுதப்பட்டவை."

288-312 தாலாட்டு

     இத்தலைப்பில் உள்ள 25   பாடல்களில் முதல் 7 பாடல்கள் (288-294) ‘பாரதி’ இதழில் (1933 ஜனு-பெப்)   வெளிவந்தன. பின்னர் ‘மலரும் மாலையும்’ தொகுதி வெளிவந்த போது 18 பாடல்கள் (295-312)கூடுதலாக
இணைக்கப்பட்டன.

326 - 331 கோழி
326 - 328 சேவற்கோழியைக் குறித்தவை
329 - 331 பெட்டைக்கோழியைக் குறித்தவை
384 - 390 புலிக்கூடு

     வில்லியம் பிளேக்       எழுதிய The Tiger என்னும் தலைப்பில்
அமைந்த, Tiger Tiger  Gleaming bright எனத் தொடங்கும் பாடலைப்
பின் பற்றி எழுதப்பட்டது.

391 - 395 ஊகமுள்ள காகம்

     இந்தப் பாடல்கள்     திருவிதாங்கூர் சமஸ்தானம் தமிழ்ப் பள்ளிக்
கூடங்களின்    பாடத்திட்டத்தில், இரண்டாம் பாட புத்தகத்தில் ‘காகமும்
குடமும்’ என்ற தலைப்பில்       இருந்தன. (1941), பின்னர் வெளிவந்த
பாடபுத்தகங்களில்         இதே பாடல்கள் ‘காகமும் ஜாடியும்’ என்னும் தலைப்பில்    கொடுக்கப்பட்டன. ‘மலரும் மாலையும்’ தொகுதியில்இவை
சேர்க்கப்பட்ட போது  ’ஊகமுள்ள’ காகம் எனத் தலைப்புத் தரப்பட்டது.
“இப்பாடல்களைப் பாடபுத்தகத்துக்கு   என்றே முன்னர் தாமோ,அல்லது
வேறு எவரோ, எழுதிய பாடல்களைத் திருத்தி கவிமணி