Untitled Document
1025 - 1030 சுத்தானந்த பாரதி
‘மலரும் மாலையும்’ தொகுதியில் ‘தவயோகி வாழ்க’; ‘சுவாமி சுத்தானந்த பாரதி புத்தேரிக்கு வந்தபோது பாடிய பாடல்கள்’ என்ற தலைப்பில் உள்ள பாடல்கள் ஒரே தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. 1028 - 1030 ‘தொண்டன்’ சித்திரை (1951) இதழில் வந்தவை.‘தொண்டன்’ மாத இதழில் வந்த இப்பாடல்களுடன் “தமிழ் நாட்டுத் தனிப்பெருந் தவயோகி சுவாமி சுத்தானந்த பாரதியார் 14-3-1951 அன்று புத்தேரிக்குச் சென்று கவிமணியைத் தரிசித்தார்கள். இருவர் தம் வாழ்வில்இதுவே முதல் சந்திப்பு. அவ்வமயம் பாரதி அவர்களுக்குக் கவிமணி அவர்கள் வழங்கிய வாழ்த்து” என்னும் குறிப்பு உள்ளது. 1029 பா.பே. வரிகள் 3, 4 இந்திய ... தழைத்து பொன்னியும் வற்றாப் பொருநையும் போலநீ மன்னுலகில் வாழ்க மகிழ்ந்து | 1031 - 1036 இராஜாஜி
1031 - 36 - இராஜாஜி வங்காள கவர்னராய் இருந்த போது பாடப்பட்டவை.
1036 - ‘நெல்லைச் செய்தி’ வார இதழ் 22-6-1952. இதில்“நெல்லை நகர சபையின் மூன்றாவது தேசியப் பொருட்காட்சியைக் கனம் இராஜாஜி திறந்து வைக்கும் வைபவத்திற்காகக் கவிமணி திரு. தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் வாழ்த்துப் பாக்கள்” என்ற குறிப்பு உள்ளது. இதில் இராஜாஜியின் படமும்உண்டு. 1031 ப.பே வரி 3 சென்னை மக்கள் - சென்னைத் தமிழர் 1033 ப.பே. வரி 1 எங்கும் மக்கள் - எங்கும் மனிதர் 1035 ப.பே. வரி 2 புண்ணியஞ்சேர் - பண்ணைமிகும் | (1038 - 1939) ப. சம்பந்த முதலியார் தமிழில் சிறந்த நாடக ஆசிரியரான ராவ்பஹதூர் பம்மல் சம்பந்த முதலியாரின் (1873-1964) எண்பதாம் ஆண்டு விழாவிற்கு (1953) எழுதப்பட்ட பாடல்கள். 1040 சிதம்பர நாதன் ம.மா.தொ.இ.பா. (கை.எ.பி) இவர் திருவிதாங்கூர் ராஜ்ய அமைச்சராக இருந்தவர். | | |
|
|