பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு457

Untitled Document


1014 வரி 3-4
அன்பு செய்..... இசை
அன்புடைய ராகிநின் றண்ணா மலைமன் மேல்
இன்புடைய வாழ்வா ரெவர். - இன்புடையவ ருண்டோ இசை}
1018 வரி 3-4
ஒரு ஜாதி ...... நிகழ்த்துவிரே
தேரும் நகரத் தன வணிகர் திலக மாக இப்புவியில்
பேரும் சீரும் பெருவாழ்வும்
பெறுமா றீசன் அருளுகவே.
1019 வரி 4
தருமம் ..... ஓங்கி வளருகவே - தரணி மீது மறவேனே.
1020 வரி 7
தொழுவேனே - வேண்டுவனே
1021 வரி 2 நல்லறங்கள் - உண்மையறம்
வரி 4 நிதம் வளர - நிதமும் வளர்ந்துவர

1023 அகஸ்தியலிங்கம்

ம.மா.தொ.இ.பா. (கை.எ.பி)

     கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டம் - ஆரல்வாய்மொழி
என்னும் ஊரில் வாழ்ந்த மக்கள் தொண்டரான அகஸ்திலிங்கம் பிள்ளை
என்பவரைக் குறித்த பாடல்.

1024 கேசவன் ஆச்சாரி

     ‘தொண்டன்’; சித்திரை 1951. இத்துடன் “இந்தியாவின் இணையற்ற
பலசாலியாய் இருக்கும் Champion Weight Lifter Prof O.K. ஆச்சாரி
அவர்களின் வலிமைக்     காட்சியைக் கண்டு மகிழ்ந்து பாடிய பாடல்”
என்ற குறிப்பு உள்ளது.  கேசவன் ஆச்சாரி (1911 - 1977) தன் உடலின் எடையை விட மூன்று   மடங்கு தூக்குபவர். இவர் திரைப்படங்களிலும் நடித்தவர்.