பக்கம் எண் :

456கவிமணியின் கவிதைகள்

Untitled Document
நவாப் ராஜமாணிக்கம்       நாடகக் கம்பெனியில் நடிகராகவும், நாடக
உரையாடல் எழுதி நடிப்பித்த வாத்தியாராகவும் பணியாற்றியவர்.

1003 - 1005 ஆறுமுக நாவலர்

     யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரின் (1822-1879) ஐம்பதாம் நினைவு
நாளை ஒட்டி வெயிடப்பட்ட மலரில் (1949 நவம்பர்) வந்த கவிதைகள்.

1003 பா.பே. (கை.எ.பி)

     வரி 2 எண்ணி எதிர் பார்க்கும் - எண்ணி நிதம் பார்க்கும்.
     வரி 3 விளக்க திருநாள் - விளக்க முற

1006 - 1008 அம்பலவாண தேசிகர் வாழ்த்து

     ‘தொண்டன்’, மார்கழி  1950-51 இதழில் “திருவாவடுதுறை ஆதீன
மகாசந்நிதானம் ஸ்ரீல ஸ்ரீ அம்பலவாண தேசிக பராமாச்சாரிய சுவாமிகள்
5-12-1950 அன்று     நாகர்கோவிலுக்கு எழுந்தருளிய போது கவிமணி
தேசிக விநாயகம் பிள்ளை     அவர்கள் பாடிய வணக்க வாழ்த்துரை”
என்ற குறிப்பு உள்ளது. இப்பாடல்கள் இக்குறிப்புடன்   சிறுபிரசுமாகவும்
இதே நாளில் வினியோகிக்கப்பட்டது. (சி.பி.)

1009 நாமக்கல் கவிஞர்

     ஆஸ்தான கவி     நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின்
அறுபதாம் ஆண்டு விழாவிற்கு எழுதி அனுப்பிய பாடல். எழுதிய நாள்
19-3-1950 (கை.எ.பி.)

1010 - 1022 அண்ணாமலை மன்னர்

     இக்கவிதைகள் எழுதிய நாள் 5-8-1950 (கை.எ.பி.)    1010 பா.பே.
வரி 1 பரந்த - பெருகி, இதே பாடலின் இறுதி வரி மட்டும் மாற்றப்பட்டு,
நேமத்தான் பட்டி பழனியப்ப      செட்டியார் (இவர் திருநாவுக்கரசரின்
அடித்தொண்டர்) என்பவரைப் பாராட்டி வெளிவந்ததை தே.ப. பெருமாள்
தன் நூலில் குறிப்பிடுகிறார். (1947 பக். 203)

    பாடலின் இறுதி வரி
    “அண்ணன் பழனியப்பன் அன்பு”
    1011 பா.பே. வரி 1 ஆதுலர்கள் ஆதலர்
    1013 வரி 2 பத்தியுடன் - இத்தரையில்
    வரி 3 இனிதாவளர்த்து மகிழ் - இனிது நடத்தி மகிழ்