பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு455

Untitled Document
     இப்பாடல் இவருக்கு ‘நாவலர்’ என்ற பட்டம் வழங்கப்பட்ட போது
பாடப்பட்டது.

985-987 டி.கே. சிதம்பரநாத முதலியார்.

     ரசிகமணி டி.கே. சிதம்பரநாத     முதலயார் (1882-1953) அறுபது
ஆண்டு நிறைவு விழாவிற்கு (1942) எழுதப்பட்ட கவிதைகள்.

988 - 998 மனோன்மணியம் சுந்தரனார்
     ‘மனோன்மணியம்’ நாடக  ஆசிரியர் பெ.சுந்தரம் பிள்ளை (1855-1897)யின் 50ஆவது நினைவு நாளை ஒட்டி (1947 ஏப்ரல்) பாடப்பட்ட
கவிதைகள்.

999 - 1000 அவதானி ஆறுமுகம்

     1000 ம.மா.தொ.இல் பாடல்கள்
     தசாவதானி ஆறுமுகனார் (1892-1958)நாகர்கோவில்கோட்டாற்றைச்
சார்ந்தவர். இவர் 10 அவதானம் செய்தவர். இவர் 1949 டிசம்பர் 11ஆம் நாள் தமிழக முதல்வர்  ஓமந்தூர் ரெட்டியார் தலைமையில் அவதானம்
செய்தார்.

     999 - தசாவதானி ஆறுமுகம் பிள்ளை அவர்கள் திருவனந்தபுரம்
உயர்நீதிமன்ற நீதிபதி       கே.ஜீ. சேஷையர் அவர்கள் தலைமையில்
தசாவதானம்  நடத்திக் காட்டினார். சபை வியந்து போற்றியது. தலைவர்
சேஷையர் ‘சபாஷ்‘ ‘பேஷ்‘ என்றுமெச்சி, தேசிக விநாயகம்பிள்ளையின்
அபிப்பிராயத்தைக் கேட்டார், உடனே அரிய கவி புறப்பட்டது. கவிமணி
அப்போது பாடிய பாடல் இது.

1001 செய்குத்தம்பிப் பாலவர்

     ம.மா.தொ.இ.பா. (கை.எ.பி.)
     நாகர்கோவில், கோட்டாறு    சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர்
(1876-1950) என்னும் தமிழறிஞரைக் குறித்த பாடல்.

1002 உடையார் பிள்ளை

     ம.மா.தொ.இல்.பா. (கை.எ.பி.)
     கடுக்கரை என்ற ஊரைச்    சார்ந்த ‘கவிதா ரத்தினம்’ உடையார்
பிள்ளை என்பவர் புத்தேரியில்       ‘கண்ணன் தூது’ கதாகாலஷேபம்
நடத்தினார். அப்போது அவரைக் கவிமணி பாராட்டிய பாடல். உடையார் பிள்ளை