பக்கம் எண் :

454கவிமணியின் கவிதைகள்

Untitled Document

946-953 திருமூல மன்னர்

     திருவிதாங்கூர்           சமஸ்தான அரசர்களில் நீண்டநாட்கள்
அரசாண்டவர் மூலம் திருநாள்     இராமவர்மா (1857 - 1924) ஆவார்.
இவரது பிறந்தநாள் விழா ஒன்றின் போது பாடப்பட்ட பாடல்கள் இவை.

     947 கோதைக்கு அணை      என்பது கோதையாற்றின் குறுக்கே
பேச்சிப்பாறை அணைகட்டியதைக் குறிப்பதாகும்.

     953 பாவடிகள் தேன்வடியப் பாடும் என்பது இளங்கோவடிகளைக்
குறிப்பிடும். அவரும் சேரமரபினர்; மூலம் திரு நாளும் சேர மரபினர்.

954 - 957 ரீஜென்ட் மகாராணி
     திருவிதாங்கூர் சமஸ்தான அரசியான சேதுலட்சுமிபாய் (1925-1931)
தன் தங்கை மகன் சித்திரை     திருநாள் பாலராமவர்மா குழந்தையாக
இருந்தபோது பகர அரசியாக இருந்தவர்.

958 - 982 சித்திரை மன்னர் வாழ்த்து
     ‘மலரும் மாலையும்’     தொகுதியில் ‘இளங்கோ நவமணி மாலை’
‘சித்திரை மன்னர் முடிசூட்டு விழா’ ‘சித்திரை மன்னர் பிறந்தநாள் விழா’
என்னும் மூன்று      தலைப்புகளில்  கொடுக்கப்பட்ட பாடல்கள் இங்கு
‘சித்திரை மன்னர்                  வாழ்த்து’ என்ற ஒரே தலைப்பில்
கொடுக்கப்பட்டுள்ளன.

     967-978 திருவிதாங்கூரின்  கடைசி அரசரான சித்திரைத் திருநாள்
பாலராமவர்மா (1931-1949)வின்  முடிசூட்டு விழாவின்போது எழுதப்பட்ட
பாடல்கள். இவை   Kerala Society Papers II Series 7 Page IV ல்
(1931) வெளிவந்தன. இதன்     முந்திய தலைப்பு “வாழ்த்துப்பா”, இதில்
அரசரின் படமும் உண்டு.

983 வெ.பா. சுப்பிரமணிய முதலியார் எண்பதாம் ஆண்டு நிறைவு

     வெள்ளக்கால் சுப்பிரமணிய    முதலியார் என்ற தமிழ் அறிஞரின்
(1857-1946) எண்பதாம் ஆண்டு நிறைவு    விழாவில் (1937) பாடப்பட்ட
பாடல்.

984 கு.ஆறுமுகம் பிள்ளை

     சைவப் பேரறிஞரான தொண்டர்   குழாம் கே.ஆறுமுகம் பிள்ளை
(1895-1969)யைப் பாராட்டிய       பாடல். இவர் 1928ல் நாகர்கோவிலில்
தொண்டர்குழாம் எனும் அமைப்பை     நிறுவினார். அதனால் இவரைத்
தொண்டர்குழாம் கே.ஆறுமுகம் பிள்ளை  என்றனர். இவர் ‘தொண்டன்’
என்னும் மாத இதழையும் நடத்தினார்.