Untitled Document
1195 - 1208 பண்டிதமணியின் கதிர்மணி விளக்கம் மகிபாலன் பட்டி மகாமகோபாத்தியாய பண்டிதமணி கதிரேசன் செட்டியாரின் (1953) திருவாசகம், திருச்சதகத்தின் ‘கதிர்மணி விளக்கம்’ நூலில் வந்தவை. (எழுதிய நாள் 30-6-1951) இத்துடன் ... “தாங்கள் இப்பணியில் ஈடுபட்டிருப்பது தமிழ்நாட்டின் பாக்கியமே ஆகும். இம்மாதிரியான விளக்கவுரை எழுதுவதற்குத் தங்களைத் தவிர வேறொருவர் இக்காலத்தில் இல்லை என்பது என் உண்மையான அபிப்பிராயம்” என்ற குறிப்பும் உள்ளது. இதே கவிதைகள் ‘தொண்டன்’; ஆவணி 1951 இதழிலும் வந்துள்ளன. 1209 புதுமைப்பித்தன் மலர்
நாகர்கோவிலில், எழுத்தாளர் சுந்தர ராமசாமி வெளியிட்ட‘புதுமைப் பித்தன் (1906-1942) மலரில்’ வந்தது. (1952) 1210-1216 மலரும் உள்ளம் அழ வள்ளியப்பாவின் குழந்தைப் பாடல்கள் தொகுப்பு (1953) 1217 - 1219 கம்பர் தரும் ராமாயாணம் டி.கே.சி.யின் ‘கம்பர் தரும் இராமாயணம்’ (பால காண்டம், அயோத்தி காண்டம் - இரண்டாம் பதிப்பு) குற்றாலம் சேது மாளிகையில் இராஜாஜி தலைமையில் 1953 அக். 31ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதற்காகக் கவிமணி பாடிய பாடல்கள் இவை.
1220 - 1224 குன்றக்குடி அடிகளார்
எம்.எஸ்.பி. சண்முகம் எம்.எ என்பவர் எழுதிய ‘குன்றக்குடி அடிகளின் வரலாறு’ நூலுக்கு எழுதிய வாழ்த்துப்பாடல்கள். இப்பாடல்களை எழுதிய போது கவிமணி அறுவை சிகிச்சை முடிந்து படுக்கையிலிருந்தார் (5-6-1954) 1125 இராமகாதை சோ.முருகப்பாவின் ‘இராமகாதை பாலகாண்டம்; ’ (ஜனு 1954) இக்கவிதைக்கு வேறு வடிவம் உண்டு. (கை.எ.பி) அது கீழ் வருமாறு “யாவருமே போற்ற இராம காதையினை பாவினயம் ஆராய்ந்து பார்த்த ளித்தோன் - மேவுபுகழ்ச் செந்தமிழ் வித்தகச் செல்வன் முருகப்பன் சந்ததமும் வாழ்க தழைத்து. | | |
|
|