Untitled Document
ஆற்றங்கரையில் உள்ள இவ்வூரும் பழமையானது. இவ்வூரில் உள்ள தாணுமாலயன் கோவிலில் கி.பி. 8ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு உள்ளது. இக்கோவிலில் சிவன் விஷ்ணு ஆகிய இருவருக்கும் திருவிழாக்கள் நடக்கும். (சித்திரை மார்கழி)
சீந்திரம் என்னும் தலைப்பில் உள்ள இப்பாடல் திருவிதாங்கூர் சமஸ்தானத் தமிழ் பள்ளிக்கூட பாடபுத்தகத்திற்காக (1941) எழுதப்பட்டது. (தே. வேலப்பன் 1996 ப.41) 1338-1350 நாஞ்சில் நாடு தமிழகத்தில் மிகப் பழைய நாடுகளில் நாஞ்சில் நாடும் ஒன்று. புறநாறூற்றில் இது பற்றிய குறிப்பு உண்டு. கி.பி. 1976ஆம் சுசீந்திரம் கல்வெட்டு இப்பெயரைக் குறிக்கும். 1546ஆம் ஆண்டு மணல்திட்டைக் கல்வெட்டு “நாஞ்சினாடு மங்கல முதல் மணக்குடி வரை. தேவாளைக்கு மேற்கு பன்னி வாய்க்காலுக்குக் கிழக்கு” என இதன் எல்லை கூறும். 1373 - 1375 ஆரல்வாய்மொழி நாகர்கோவில் - திருநெல்வேலி சாலையில் 14 கி.மீ. தொலைவில் உள்ள ஊர் ஆரல்வாய்மொழி. 1373 - தமிழகத்தில் அதிக அளவு வேகம் கூடிய காற்று வீசுமிடம் ஆரல்வாய்மொழி; 1374 - ஆரல்வாய்மொழியில் உள்ள தண்டங்கீரைக்கு நாஞ்சில் நாட்டில் பெருமதிப்பு உண்டு. 1374 பா.பே. வரி 3-4 ஆரையூர்க் கீடாய் அவனியின் நீயறிந்த ஆரையூர்க் கீடாய் அவனியின் நீயறிந்த ஊரேதும் உண்டோ உரை. 1375 - அங்கயல் - தனியூர்
இவ்வூரில் உள்ள மீனாட்சி சுந்தேரேஸ்வரர் ஆலயத்தோற்றத்தை இது சுட்டுகிறது. மதுரையில் முஸ்லீம்களின் படை எடுப்பில் மதுரைமீனாட்சியையும், சுந்தரரேஸ்வரரையும் ஆரல்வாய்மொழி கிலுகிலுப்பைக் காட்டில்மறைத்து வைத்தார்கள் என்பது இவ்வூர் வாய்மொழி வழக்காறு. இவ்வாறு சுந்தரேஸ்வரரை மறைத்து வைத்த இடம் கோவிலானது என்பது தலபுராணச் செய்தி. | |
|
|