பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு475

Untitled Document
1330 போற்றிக்கண்ணு

     ம.மா.தொ.இ.பா.
     தேரூரில் வாணத்திட்டு திருவாவடுதுறை சாந்தலிங்கத் தம்பிரானிடம்
இளம் வயதில் பாடம்   கேட்டிருக்கிறார் கவிமணி. தம்பிரான் ஒரு முறை
போற்றிக்கண்ணு என்பவரிடம் தனக்கு    உருத்திராட்சம் வாங்குவதற்குப்
பணம் கொடுத்திருக்கிறார். போற்றிக்கண்ணு தம்பிரானை ஏமாற்றிவிட்டார்.
உருத்திராட்சம்      வாங்கக் காலந் தாழ்த்தினார். இந்த நிகழ்ச்சி தேசிக
விநாயகம் பிள்ளையைப் பாதித்திருக்கிறது. அவர் அப்போது பாடியபாடல்
இது. இந்த நிகழ்ச்சியை மு.சண்முகம்பிள்ளை (1977 ப.11) குறிப்பிடுகிறார்.
அவர் கவிமணியின் 20 வயதில் இப்பாடல் இயற்றப்பட்டருக்க வேண்டும்
என்று கூறுகிறார். இப்பாடலைத் தேரூர் உமைதாணு பிள்ளை   அனுப்பி
உதவியதாகவும் மு.ச.குறிப்பிடுகிறார்.

1331 மந்தாரைமலர்

     தேரூரில் இருந்த      கவிமணியின் நண்பரின் இளமை அனுபவம்
தொடர்பானது இப்பாடல். நண்பர்   பால்ய விவாகம் செய்தவர். மனைவி
பூப்பு எய்தவில்லை.     அதனால் ஏங்கிய அவர் ஊரைவிட்டுக் கிளம்பி,
மதுரைக்குப் போய் விட்டார்.        சில ஆண்டுகள் கழிந்து, மனைவி
பூப்பெய்திய செய்தி      கிடைத்தது. உடனே கவிமணி அச்செய்தியைக்
கவிதை, வழி தன்    நண்பருக்குத் தெரிவித்தார். அக்கவிதை இது. இது
1895 - 1900 அளவில் பாடப்பட்டிருக்கலாம்.

1332 சிதம்பர கிருஷ்ணர்

    
     ம.மா.தொ.இ.பா. (கை.எ.பி)
     கவிமணியின் நண்பர்  கரிய மாணிக்கபுரம் என்ற ஊரில் இருந்தார்.
சிதம்பர கிருஷ்ணன் என்ற அந்த   நண்பரைத் தேடி அவர் வீட்டிற்குக்
கவிமணி சென்ற      போதெல்லாம் அவர் வீட்டில் இல்லை என்பதைக்
கவிமணி அறிந்தார். அப்போது கிண்டலாகப் பாடிய பாடல் இது.  இதைச்
செ.சதாசிவன் பிள்ளை (1946 ப.450 குறிப்பிடுகிறார்.

1333-1336 சரத் காலம்


     ‘பாரதி’ 1933 ஏப்ரல் மே; பண்டித தேசிக விநாயகம் பிள்ளைஎன்ற
பெயரில் வெளிவந்துள்ளது.

1337 சுசீந்திரம்

     நாகர்கோவிலிலிருந்து கன்னியாகுமரி செல்லும்  சாலையில் 5 கி.மீ.
தொலைவில் சுசீந்திரம் ஊர் உள்ளது. பழையாறு என்னும் தொன்மையான