Untitled Document
1313 கே.ஜி. சங்கரய்யா கே.ஜி. சங்கரய்யா திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக இருந்தவர். பம்பாய் மைய நூலகத்தில் உயர் அதிகாரியாக இருந்தவர். சிறந்த தமிழ் அறிஞர். இவர் இறப்பின் போது கவிமணி வையாபுரிப் பிள்ளைக்கு எழுதிய கடிதத்தில், இப்பாடல் இருந்தது. இத்துடன் ஒரு குறிப்பும் இருந்தது. அது வருமாறு “நண்பர் அருமை நண்பர் ஸ்ரீ சங்கரய்யர் அவர்களுடைய பிரிவை அறிந்து மிகவும் வருத்தம் அடைகிறேன். சில மாதங்களுக்கு முன் பம்பாயிலிருந்து அவர்கள் எனக்கு எழுதிய கடைசிக் கடிதத்தில் நாம் இருவரும் இனி இந்த உலகத்தில் சந்தித்துக் கொள்ளமாட்டோம் என்று எழுதியிருந்தார்கள். அது இப்போது உண்மையாகி விட்டது. என்ன செய்யலாம். எல்லாம் ஈசன் செயல். நம்மாலானது ஒன்றுமில்லை” இந்தக் குறிப்பும், பாடலும் ‘தினமலரில்’ (22-2-1952) வெளியாகியுள்ளது.
1314 ஆர்.கே. சண்முகம் செட்டியார்
1315 திரு.வி.க. திரு.வி. கல்யாண சுந்தர முதலியார் (1883-1953); பாடல் எழுதிய நாள் 17-9-1953. 1316-1320 பண்டித மணி மகிபாலன் பட்டி மகாமகோபாத்தியாய பண்டிதமணி கதிரேசன் செட்டியார் (1953) பிரிவு. இப்பாடல்கள் ‘ஈழகேசரி’ (விஜய ஆண்டு ஜப்பசி 23)யில் வந்தன. பா.பே. 1320 வரி 2-3-4 “இதுவரை ... நான்” .... இசை யெங்கம் பெற்றான் கதிரேசன் பேரம்பலத்தரனார் நற்றாள் கலந்துய்ந்த நாள் 1321-1329 டி.கே.சி. ரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியாரின் (1882-1954) பிரிவு டி.கே.சி. மறைந்த (16-2-1954) அடுத்த வாரமே இக்கவிதைகளைக் கலைமகளுக்கு அனுப்பியிருக்கிறார் கவிமணி. 1327,28,29 ம.மா.தொ.இ. பாடல்கள் (கலைமகள் பெப் - 1954) | |
|
|