| முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 473 |
Untitled Document
1287-1291 இந்த இரண்டு பாடல்களும் ‘கலைக்கதிர்’ இதழில் ‘அவர் காட்டிய வழி’ என்னும் தலைப்பில் வெளியாகியுள்ளன. 1293-1300 நீதிபதி S.J. சத்தியநேசன் : நாகர்கோவிலைச் சார்ந்தவர் 1300 ம.மா.தொ.இ.பா
1301 - 1303 இலட்சுமணபிள்ளை (1864-1950)
1304 பி.சிதம்பரம்பிள்ளை;
வழக்கறிஞர்; வரலாற்று அறிஞர்; “கோவில் நுழைவுப் போராட்டம்” குறித்த இவரது நூல் குறிப்பிடத் தகுந்த ஆராய்ச்சி நூல். நாஞ்சில் நாட்டுகாரர். 1305-1306 அணைந்த ஜோதி யோகி அரவிந்தர் (4-12-1950) மறைந்த போது பாடியது. இப்பாடல்கள் ‘கலைமகள்’ பொங்கல் மலரில் (ஜனு 1951) வந்தன. 1307 செய்குத்தம்பிப் பாவலர் கோட்டாறு சதாவதானம் கா.செய்குத்தம்பிப் பாவலர் (1874-1950) 1308 அனந்த கிருஷ்ண அய்யங்கார் ‘அபிநவக் காளமேகம்’ எனப்பெயர் பெற்ற அனந்த கிருஷ்ண அய்யங்கார். 1309 தீத்தாரப்பா டி.கே.சிதம்பரநாத முதலியாரின் மகன் செல்லையா என்னும் தெ.சி. தீத்தாரப்ப முதலியார். 1310-1311 அண்ணாமலை செட்டியார் ‘ராஜா சர் அண்ணாமலைச் செட்டியாரின் பிரிவு’ என்பது முந்திய தலைப்பு. இக்கவிதை எழுதிய நாள் 5-8-1950 (கை.எ.பி) 1312 பொன்னையா ’ஈழகேசரி’ ஆசிரியர் பொன்னையாவின் இறப்பு குறித்தஇக்கவிதை ஈழகேசரியில் (29-4-1951) வெளியாகியுள்ளது.
பா.பே.வரி 4 தேடியழ - ஏங்கியழ | |
|
|