பக்கம் எண் :

484கவிமணியின் கவிதைகள்

Untitled Document

எனப் பிறிதொரு சாசனம் தெரிவிக்கின்றது.  இரண்டாங் குலோத்துங்கன்
காலத்தும், மூன்றாம் ராஜராஜன் காலத்தும், சோழரதுஏகாதிபத்தியத்துக்கு
இந்நாடு உட்பட்டிருந்ததென்றும் சாசனங்கள் உணர்த்துகின்றன.இங்ஙனம் உட்பட்டிருந்தமையால்  கோட்டாற்றிற்கு ‘மும்முடிச் சோழபுரம்’என்றும்,
பின்னர் ‘சோழ கேரளபுரம்’ என்றும்     புதிய பெயர்கள் உண்டாயின.
கன்னியாகுமரியில் தேவியைக் குறிக்க நேரிடும் சாசனங்களில்‘ராஜராஜப்
பாண்டிய நாட்டு   உத்தம சோழ வளநாட்டுப் புறத்தாயநாட்டுக் குமரிக்
கன்னியா பகவதியார்’ என      வருகின்றது. நாஞ்சினாடு உத்தமசோழ
வளநாட்டின்             பிரிவாகவே ஒரு சாசனத்தில் (T.A.S.i. 163)
கூறப்பட்டிருக்கிறது.          சாசனங்களிற் காணும் நாட்டுப்பெயர்கள்
இந்நாஞ்சினாடு         என்ற பெயரொழிய அதனோடியைந்த ஏனைய
பெயர்களெல்லாம்         இப்பொழுது மறைந்துவிட்டன.

     சோழவம்சம் வலிகுன்றியொழியவே,     சேர அரசர்கள் மீண்டும்
நாஞ்சினாட்டுப் பிரதேசத்தைக்கைப்பற்றியாளத்  தொடங்கினர். இங்ஙனம் ஆளத் தொடங்கியது.                கி.பி. 15-ம் நூற்றாண்டின் முதற்
பகுதியாயிருக்கலாமெனத்       தோன்றுகிறது. சேர  அரசர்கள் தங்கள்
உரிமையை   நாட்டிய போதிலும், பாண்டியநாடு முதலியவற்றை ஆண்டு
வந்த விஜயநகரப்            பேரரசர்களின் பிரநிதிகளாலும் மதுரைப்
பிரதேசத்தையாண்ட நாயக்க   அரசர்களாலும்அடிக்கடி அல்லற்பட்டனர்.
படையெடுப்புகள்        நிகழ்ந்தவண்ணமாயிருந்தன.நாஞ்சினாட்டுக்கும்
திருநெல்வேலிக்கும்  இடைபட்ட பிரதேசம்  அடிக்கடிகைம்மாறி வந்தது.
இப்பிரதேசத்தைத்‘திருவடி தேசம்’ என்று சாசனங்கள்  குறிப்பதிலிருந்து,
இது நீண்ட காலமாகச் சேர     அரசர்கள் கைவசமிருந்ததெனக் கருத
வேண்டியதாயிருக்கிறது.          ஆனால் விஜயநகரப் பிரதிநிதிகளுள்
விட்டலராயர் முதலியோரும்  நாயக்கர் சேனாதிபதியான   ராமப்பய்யன்
முதலியோரும் திருவடி தேசத்தின் உட்பகுதிக்கேபடையெடுத்துச் சென்று
தங்கள் அரசரின் பெருமையை நிலைநாட்டினர்.நாயக்கர் படை கொல்லம்
810 முதல் (கி.பி. 1635) நாஞ்சினாட்டை மிகவும் துன்புறுத்தியது என்றும், இது போன்ற காரணங்களால், கொல்லம் 849 முதல்  869 வரை, நிலவரி
முதலியன நீக்கப்பட்டன      என்றும் முதலியார் ஓலை சாசனமொன்று
தெரிவிக்கின்றது. கி.பி. 1700-க்குப்   பின்தான் நாஞ்சினாட்டில் சிறிதளவு
சமாதானம் ஏற்பட்டதென்று சொல்லலாம்.ஆனால்உள்நாட்டுக்கலகங்களும்
திப்பு சுல்தானது               படையெடுப்பால் வந்த விபத்துக்களும்
நாஞ்சினாட்டினருக்குப்     பெருந்துன்பம் விளைவித்தன. இதுவும் நீங்கி, கடந்த நூறு ஆண்டுகளாகத்தான் நாடு அமைதி பெற்றிருக்கிறது.