| இரண்டாவது ஓவியம் ஒரு மனிதன் காகிதப்பொதி ஒன்றைத் தலையில் சுமந்து கொண்டு நிற்பது போன்ற காட்சியைக் குறிப்பது. இதுவழக்கில் வென்றவர், தனது பொருளை எல்லாம் வழக்காடுவதில் இழந்து, பின்னர் வழக்கு தொடர்பான ஆதாரப்பிரமாணங்களை மட்டுமே சுமந்து செல்வதாகக் குறிப்பிடுகிறது. |
| இந்த இரண்டு ஓவியங்களையும் பார்க்கின்றவர்கள், வழக்கில் வென்றவர் நிலையையும், தோற்றவர் நிலையையும் நன்றாக உணரட்டும் என்பதற்காக இந்த ஓவியங்கள் இருந்தன என்பர். |
| 1031 | ஓட்டை - சட்டியை (சுடுமண் பாத்திரம்) |
| 1033 | தாட்பொதி - காகிதக் கட்டு |
| 1041 | புத்தியில்லாத ..... மீண்டதாய் |
| இரண்டு பூனைகள் தங்களுக்குக் கிடைத்த அப்பத்தைப் பங்கு வைத்துக் கொடுக்குமாறு ஒரு குரங்கிடம் கேட்க, குரங்கு இரண்டு பூனைகளையும் ஏமாற்றி அப்பத்தைத் தின்றது. இது பஞ்சதந்திரத்தில் உள்ள கதை. |
| 1050 | அந்திரபுரம்-நாஞ்சில் நாட்டில், தோவாளை தாலுகாவில் உள்ள மலையடிவார ஊர். ஞாலம் ஊரை அடுத்து அந்திரபுரம் என்றொரு ஊர் உள்ளது. |
| 1052 | மச்சம்பி - மைத்துனன் |
| 1061 | வாய்தா - விசாரணை நாளைத் தள்ளிப் போடுகை (Adjournent) |
| 1063 | முட்டப் பஞ்சம் - முழுமையான பஞ்சம் |
| 1066 | உச்சி - தலைமுடி |
| 1067 | தொட்டில் கட்டத் துணி - குழந்தைகளுக்குரிய தொட்டில் கட்டப் பயன்படும் துணி |
| 1068 | கண்டாங்கி - சேலை |
| 1071 | மொழி - சாட்சி |
| கொடுக்க - சொல்வதற்கு |
| 1074 | முதல்படி - ஊர்த்தலைவர்; ஊர்டிரஸ்டி; ஊரில்குறிப்பிடத்தகுந்த முதல் ஆள்; பொக்கிஷதாரன்; ஊரின் பொது நிதி இவன் வசம்இருக்கும். |
| முளைய நல்லூரைச் சார்ந்த ஒருவன் நாஞ்சில் நாட்டு மக்களுக்குப் பெரும் துன்பம் கொடுத்தான் என்பதைக் குறிக்கும்.பழம்பாடல் இது |
| கோளை மூட்டும் கடுக்கரையில் கொச்சு மாடன் சங்கரனும் தாழக்குடியில் வைரவனும் தமிழ்த் தேரூரில் சந்திரனும் |