பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு527

Untitled Document
கூழம் பெருத்த முளைய நல்லூர்
     குறும்பன் அணஞ்ச பெருமாளும்
நாளை இவர்கள் தலை தெறித்தால்
     நன்றாய் வாழும் நாஞ்சில் நாடு.
1076 விளாத்திகோணம் - ஒரு பெரிய நிலத்தில் பெயர்,கோணம் -
ஒருவருக்கு உரிமையான பல நிலங்கள்   அடுத்தடுத்து ஒரு
சேகரமாகக் கிடக்கும் பகுதி.
1078 மூக்கறையன் விளை - ஒரு தோட்டத்தின் பெயர்; புன்செய்நிலம்
1079 வகை - சொத்து
1082 மதினி - அண்ணி
1084 இறக்கிவிட்டாள் - கழற்றி விட்டாள்
1086 வேற்றாள் - வித்தயாசமான ஆள்
1087 கருந்தாளி உலக்கை - கருந்தாளி மரத்தால் செய்த உலக்கை
1088 கோவில் நெல்-நெல் அரவைஆலை வரும் முன்பு, நெல்லை
உலக்கையால் குத்தி அரிசியை   எடுக்கும் நிலை மட்டுமே.
நாஞ்சில்        நாட்டில் இருந்தது. அரசுக்குச் சொந்தமான
குறிப்பிட்ட சிலகோவில்களில்    தினமும் பெரும் அளவுக்கு
அரிசி  தேவைப்பட்டதால் நெல்குத்துவதற்கு      உயர்சாதி
பெண்களை        வேலைக்குப்   பயன்படுத்தும் வழக்கம்
இருந்தது.பெரும்பாலும் கணவனால் கைவிடப்பட்ட மருமக்கள்
வழி வேளாளப்    பெண்கள் இந்த வேலைக்குச் சென்றனர்.
1091 நாட்டியும், குட்டியும், நாழியும்,உழக்கும் கைக்குழந்தைகள்;ஒரு
வயதுக்கு ஒரு குழந்தை என    இருக்கும் எண்ணிக்கையைக்
குறிக்கும் வழக்காறு
1096 வல்லம் - பச்சைத் தென்னை ஓலைக் கூடை
1105-9 வழக்குரைஞர், வழக்குப்     பேசுவதற்குரிய சம்பளத்தைப்
பிராமிஸரி நோட்டாகத்      தன் கட்சிக்காரரிடம் எழுதிய
வாங்கிக் கொள்ளுவதும், பின்னர் அவர் எழுதிக் கொடுத்த
பணத்தைக்கொடுக்காத   நிலையில் அவரின் வீடு அல்லது
நிலத்தை      எடுத்துக் கொள்வதும்ஆகிய நிகழ்ச்சிகளை
இவ்வரிகள் குறிப்பிடும்.
1105 கரையாளன்-இது உத்தியோகப் பெயர். கரையில் வரிப்பணம்
வாங்குபவர். நாஞ்சில் நாட்டின் கரை,  தேசம் என்னும் பகுதிகளில் வரி பிரிப்பவர்.
1118 பிள்ளைக்கெண்டி - குழந்தைகள் தண்ணீர் குடிக்கப் பயன்படும்
மாத்திரம். மூக்குள்ள பாத்திரம்.