பக்கம் எண் :

528கவிமணியின் கவிதைகள்

Untitled Document
1119-20 சருவம் .... சிரட்டை - பாத்திர வகைகள்
குட்டுவம் - தண்ணீர் விட்டு வைத்திருப்பதற்காகப் பயன்படும்
பெரிய பாத்திரம்
கொப்பரை; பிடியோடு கூடிய பெரிய பாத்திரம்
குழியல் - உணவு உண்பதற்குப் பயன்படும் பாத்திரம்
உப்போடு - உப்பு வைக்க உதவும் மரப் பாத்திரம்; உப்பு மரவை எனவும் படும்
சிரட்டை - கொட்டாங்க ச்சி (Coconut Shell)
அற்பமான பொருட்கள்  வரை நீதிமன்றம்  விட்டுவைக்காது
என்பது இங்கு குறிக்கப்படுகிறது
1125 கட்சிக் கொடை-கிராமங்களில்,மக்களில் சிலர் பணம் போட்டு
நடத்தும் நாட்டார் தெய்வவிழா
1126 மாடன் கொண்டாடி -சுடலைமாடன் என்னும் தெய்வத்திற்கு
அருள்வந்து ஆடுபவன்
1128 பூவை எடுத்தல்-விழா  நிகழும் நாட்டார் தெய்வத்தின் அருள்
வந்து சாமியாடுபவரின் செய்கையில் பூ எடுத்தல் முக்கியமானநிகழ்ச்சி
1129 வாறண்டுக்காரன் -    ஆளைக்     கட்டுப் படுத்திப் பிடிக்க
அரசாங்கத்தாரின் கட்டளையைக் கொண்டுவருபவன்(Warrant)
1130 குட்டிச்சுவர் - கட்டையான சுவர்
1132 ஓச்சன் குளம்-உவச்சன் குளம்; உவச்சன் ஒரு சாதிப் பெயர்;
காளி கோவிலில் பூசை செய்கின்ற இச்சாதியினர் கம்பர், பாரி
சைவர் எனவும் படுவர்.     இச்சாதியின் பெயரால் அழகிய
பாண்டியபுரம் வீரபத்திர அம்மன்    கோவிலின் எதிரே ஒரு
குளம் உள்ளது.
1133 மடை - குளத்துக்கு நீர்வரும் வழி
1134 சாமி சுடலைச் சாம்பலாடி - சுடலைமாடன் கோவில் விழாவில்,
சாமியாடி சுடுகாட்டுக்குச்சென்று,சுடுகாட்டுக் குழியில் இறங்கிச்
சாம்பலைப் பூசி வரும் என்பது வழக்கு.
1141 மடக்கிவிட்டதும் - சாமியாடியை வாறண்டுக்காரன் பிடிக்காமல்
திரும்பிப் போகச் செய்ததும்.
1144 தேடினமுதல் - உழைத்துச் சம்பாதித்த சொத்து
1147 ஆஆ என்று அலைஆமீன் - அமீனா
1151-64 வழக்குரைஞர் பற்றிய வர்ணனை
1165-71 வழக்குரைஞரின் குமஸ்தா பற்றிய கிண்டல்