என்ற கவிதையை அறியாதவர்கள் இருக்கமாட்டார்கள். இக் கவிதையிற் கூறியுள்ளது தே.வி. அவர்களைப் பற்றிய அளவில் முற்றும் உண்மை, உண்மை. ஆனால், இருபத்திரண்டு வயதளவு மட்டுமல்ல; இன்றுவரை அப்படித்தான். ஸ்ரீ தே.வி. அவர்கள் நீடூழி வாழ்ந்து கவிதா உபசரணையில் உயிர் தளிர்ந்து நின்று தமிழன்னைக்குத் தொண்டு புரியுமாறு இறைவன் அருள் புரிக. உண்மைக் கவிதை இன்பத்தைத் தமிழ் மக்களுக்கு ஊட்டி இச்சிறு வெளியீடு நீடுநிலவும் என்று உறுதியாய் நம்புகிறேன்.
|