பக்கம் எண் :

538கவிமணியின் கவிதைகள்

Untitled Document
பின்னிணைப்பு எண் - 7

உமர் கய்யாம் பாடல்கள்

வையாபுரிப் பிள்ளையின் முன்னுரை

     உமர் கய்யாம் பாரஸிக தேசத்தில் தோன்றிய பெருங் கவிஞர்.இக்
கவிஞரின் புகழ் நமது தமிழ்       நாட்டிலும் பரவி வருகிறது.  இவரது
பாரஸிகப்     பாடல்களைக்கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை  மொழி
பெயர்த்தது நமது பாக்கியம் என்றே    கூற வேண்டும். தமிழ்  நாட்டில்
அவர் பெயர் என்றும் மங்காது ஒளிவிட்டுத் திகழும்படி செய்து விட்டார் நமது கவிமணி. ஆங்கில    உலகில் ப்விட் ஜிரால்ட் என்ன  மதிப்பைப்
பெற்றுள்ளாரோ     அம்மதிப்பு கவிமணி அவர்களுக்கும் உரியது. இவர்
மூலமாய் நமது நாட்டில் உமார் கய்யாம் ஓர் அற்புதமான   மறுபிறவியை
எடுத்துள்ளார்.

     இரான் தேசத்துக் கவிஞர்களுள் உமார் ஒரு சிறந்த கவிஞர் என்று கூடச் சொல்லமுடியாது. தம்  காலத்தேஇவர் பீஜ கணிதத்தில் ஒரு சிறந்த
மேதாவியாகவும், ஜோதிஷத்தில் ஒரு  நிபுணராகவும் புகழ் பெற்றிருந்தார்.
இவர் அராபி மொழியில் இயற்றிய பீஜ கணிதம், மிகப் பலவாய்ப்பிரதிகள் செய்யப்பட்டு, பலராலும்       கற்கப்பட்டு வந்தது. இவர் இயற்றியுள்ள
முகம்மதியப் பஞ்சாங்கம் கணிதத்தில் இவருக்கிருந்த  பெருந்திறமையைக்
காட்டவல்லதென்பர். இவரது ஆழ்ந்த கல்வியறிவுமுதலியவற்றையெல்லாம் தற்கால மக்கள் மறந்துவிட்டார்கள்.      மறவாது போற்றுவது எவற்றை
என்றால், வாழ்க்கையைக் குறித்தும், அது பயனின்றி       வறிதாயுள்ள தன்மையைக் குறித்தும் இவர் சிந்தித்து  எழுதியுள்ள பாடல்களைத்தான்.
இவற்றிலே, லட்சணக்கணக்கான    மக்களுடைய உள்ளத்தில் தோன்றும்
சந்தாப உணர்ச்சி பிரதிபலிக்கிறது

     இக் கவிஞரது உண்மைப் பெயர்    கியாதுடீன் அபுல்பாத் உமார்.
கி.பி. 11-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிஷபூர் என்ற நகரத்தில் இவர்
பிறந்தார். இவர் தமது பெயரோடு கய்யாம் என்பதையும் தாமேசேர்த்துக் கொண்டார். ‘கய்யாம்’என்பதற்குக் ‘கூடாரம் செய்பவன்’ என்று பொருள்.
இத் தொழில் இவரது             தந்தைக்கு இருந்தது போலும்.இவர் பள்ளிக்கூடத்தில் வாசித்துக் கொண்டிருக்கும் பொழுது, இவரது பள்ளித்
தோழர்களாய் இருவர் இருந்தனர். இவர்கள்தங்களுக்குள் ஓர் ஒப்பந்தம்
செய்து கொண்டனர். தம்முள்      யாரேனும் ஒருவர் உன்னத பதவியை
அடைந்து, பணக்காரரானால் அவர் மற்றவருக்கு உதவி செய்து,அவரைப்
பதவியில் உயர்த்த