| முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 539 |
Untitled Document வேண்டும் என்பதுதான் அந்த ஒப்பந்தம். வியக்கத்தக்க முறையில் இந்த ஒப்பந்தம் நிறைவேறியது. ஒருவர் ஒரு மாகாணத்தை ஆளும் பதவியைப் பெற்றனர்.உடனே இவர் அரண்மனை ஸர்வாதிகாரப் பதவியைத் தம் தோழர்களுள் ஒருவருக்குக் கொடுத்தனர். உமருக்கு அவரது கணிதப் பயிற்சி இடையீடின்றி நடைபெற வேண்டும்என்று கருதி, ஆண்டுதோறும் ஒரு பெருந்தொகையைக் கொடுத்தக் கவலையின்றி வாழச் செய்தார்.
இவ்வாறாகப் பணக்கவலை யாதொன்றும் இல்லாதபடி உமர்கய்யாம் தம்முடைய நீண்ட ஆயுளை, கணிதம் முதலிய சாஸ்திரப் பயிற்சியில் செலவிட்டு வந்தார். இடையிடையே மக்களுயை இம்மை, மறுமைமுதலிய பொருள்கள் பற்றியும் ஆழ்ந்து சிந்தித்து அற்புதமான செய்யுட்கள் பல இயற்றினார். இச் செய்யுட்களுக்கு, ‘ருபாய்த்’ என்று பெயர். ‘ருபாய்த்’ என்றால் நான்கடிச் செய்யுள் என்று பொருள். தமிழிலுள்ள நாலடியார் என்ற நூற்பெயரை இதனோடு ஒப்பிடலாம்.
இவர் சிந்தித்துக் கண்ட முடிபு இன்ப உணர்ச்சியை விளைவிக்கத் தக்கதன்று. இவர் பாடல்களிலே வாழ்வு முடிந்ததன் பின் மறுமையைக் குறித்து யாதும் உறுதியாகக் கூறமுடியாது என்ற கொள்கை தொனித்துக் கொண்டே இருக்கிறது. இவ்வுலகத்தில் உண்பதும், குடிப்பதும், சுகித்து வாழ்வதும்தான் கைகண்ட பலனோ என்று இவர் ஐயுறவு கொண்டனர். ஒரு சோக உணர்ச்சிதான் இவரது பாடல்களின் அடிநாதமாய் அமைந்துள்ளது.
இச் சோக உணர்ச்சியை இவரது அரிய கவிதை வாசிப்போர் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் புகுத்தி, நிலைபெறச் செய்யவல்லது. எனினும் ஒரு சார் அறிஞர்கள், இச் சோக உணர்ச்சியில் ஈடுபடாது ஒன்றிலும் நம்பிக்கையற்றவன் இகழ்ந்து நகையாடும் அடங்காச் சிரிப்பொலியையும், மது, மங்கையரின்பம், மதுரமான பாடடின்பம் இவற்றை வற்புறுத்தும் உபதேச ஒலியையும் இவர் பாடல்களில் கண்டனர். ஆனால், ஆன்மாக்கள் துடிதுடித்து வருந்தும் துன்பநிலை இந்தப் பாரஸிகக் கவிதைகளிலே அங்கங்கே காணப்படுதல் உண்மை.
வந்த வந்த மனிதரெல்லாம் வளைவும் நெளிவும் கண்டுஎன்னைச் சந்த மில்லாப் பானையெனத் தள்ளி வைத்துச் சென்றனரால்; அந்த நாள்அக் குயவன் கை ஆட்டத் தாலே நேர்ந்தபிழைக்கு இந்த நாளில் ஏழை எனை ஏனோ குறைகள் கூறுவரே! | | |
|
|