பக்கம் எண் :

540கவிமணியின் கவிதைகள்

Untitled Document
வழியிற் குண்டு குழிவெட்டி
     வலையுங் கட்டி மதுவுண்டு,
விழவோர் விதியும் அந்நாளே
     விதித்து வைத்துஎன் கேடெல்லாம்
அழியாப் பாவம் அதனாலே
     ஆன விளைவென்று அறைவாயோ?
தெளியாது உலகில் என்றென்றும்
     திகைத்து மறுகி நின்றேனே!

     நன்மையும், தீமையும் ஒருங்கு வாழும் இடமாக நம்மைப் படைத்து விட்டு, நாம் செய்யும் தீமைகளுக்கு      நம்மை இறைவன் தண்டிப்பது
நீதியாகுமா என்று கவிஞர் கேட்கிறார்.

யாது சொன்னாய்? இன்னமுதம்
     ஏந்தி உண்ட கலமதனை
மோதி உடைக்கும் அறிவில்லா
     மூடன் எங்கும் உண்டுகொலோ?
ஓதற் கரிய பேரருளால்
     உவந்து கண்ட உருவமதைத்
தீதென் றெண்ணிச் சினம்பெருகிச்
     சிதைக்கத் தெய்வம் துணிந்திடுமோ?

     வாழ்வின் ரகஸியங்களையெல்லாம்   உமர் ஆழ்ந்து நெடுங்காலம்
சிந்தித்துள்ளார். இன்பதுன்பங்களைக்        குறித்து அவர் கூறுவதைக்
கேளுங்கள் :

ஊனாருடலம் இது வீழின்
     உண்டாம் வாழ்வின் நிலையறிய
ஆனா ஆசை மிகவேஎன்
     ஆன்மா வினையான் வேண்டிநின்றேன்;
நானா உலகம் நெடுநாளா
     நாடி யலைந்து வந்ததுதான்
‘யானே சொர்க்கம் நரகமெலாம்’
     என்றே கூறி நின்றதுவே.

துன்பம் வருதல் ஒருதலை என்பதும், அதனைத் தடுத்தல் இயலாது என்பதும் பின்வரும் செய்யுள் காட்டுகிறது.