பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு541

Untitled Document
எழுதிச் செல்லும் விதியின்கை
     எழுதி எழுதி மேற்செல்லும்;
தொழுது கெஞ்சி நின்றாலும்
     சூழ்ச்சி பலவும் செய்தாலும்
வழுவிப் பின்னால் நீங்கியொரு
     வாரத்தை யேனும் மாற்றிடுமோ?
அழுத கண்ணீ ராறெல்லாம்
     அதிலோர் எழுத்தை அழித்திடுமோ?

     ஆனால் மரணத்தின்            ரகஸியத்தையும் அதற்குப் பின்
நிகழ்வதையும் குறித்து யாதும் தெரிய முடியாது என்கின்றார் கவிஞர்.

மண்ணை வலமாய்ச் சுற்றி வந்தேன்;
     வானும் அளந்து கணக்கிட்டேன்;
நண்ணும் வழியில் பலசிக்கல்
     நாடி நன்கு விளக்கிவந்தேன்;
எண்ணும் மனிதர் தமையடையும்
     இறப்பும் ஊழும் இவையென்று
திண்ண மாகச்சொல்ல எதும்
     தெரியாது இங்கே திகைத்தேனே!
திட்டிக் கதவு தெரிந்ததடா!
     திறவு கோலும் இல்லையடா!
கட்டித் திரையும் கண்டதடா!
     கண்ணும் மயங்கி நின்றதடா!
ஒட்டிச் சிறிது நீதான் என்று
     உரைத்த உரையும்கேட்டதடா!
நட்ட காலம் பின்னையடா!
     நான்நீ யற்றுப் போச்சுதடா!

     இவ்வாறு தெரியாததைத்  தெரிந்தது போலப் பாசாங்கு பண்ணுவது
உமருக்கு வெறுப்பையே விளைத்தது. அறியாமையினூடே படாடோபமான வார்த்தைகளைப் பேசி நாம்       நடிக்கிறோம். விஞ்ஞானம், தத்துவம்
முதலியன எல்லாம் மறுமை பற்றிய அளவில் பயனற்றனவே.

அன்றென் இளமைப் பருவத்தில்
     அறிவிற் சிறந்த புலவரையும்
நன்று சீல முடைய பெரு
     ஞானிகளையும் அடிபணிந்து