பக்கம் எண் :

542கவிமணியின் கவிதைகள்

Untitled Document
நின்று கேட்ட வாதங்கள்
     நினைப்பின் அரிய ஆயிடினும்
சென்ற வாயில் வழீயேதான்
     திரும்பி அந்தோ வந்தேனே!

     ஞானிகளாவது பிற பேரறிஞர்களாவது இதற்கு ஒரு முடிவு சொல்ல
முடியுமா? முடியாது. அவர்களை இயற்கை இகழ்ந்து சிரிக்கிறது.

கொற்ற மன்னர் முடிசூடிக்
     கொலுவில் அமர்ந்த திருக்கோயில்
முற்றுங் கூகை ஆந்தையொடு
     முதபேய் வாழும் காடாமே!
வெற்றி வில்லை ஏந்திமுனம்
     வேட்டை செய்த வேடன் கை
பற்றி நரிகள் இழுப்பதையும்
     பாரில் கண்ணால் பார்ப்போமே!

     ஆனால், மனிதன்       செய்யக்கூடியது ஒன்று உண்டு. மரணத்
தருவாயிலே,      மனத்திட்பத்தோடு, யாராலும் துணிய முடியாத அந்த
மறுமையில் யாதுதான் உள்ளதென       அறிய, அவன் தைரியத்தோடு
செல்லக்கூடும். இவ்வாறு செல்வது அவனிடத்துள்ள தெய்வத்தன்மையை
வெளிக்காட்டுகிறது.


     ஆனால், இந்த      மண்ணுலகத்திலே எல்லாவற்றையும் இழந்து
விட்டோம் என்ற        உணர்ச்சி ஏன் நமக்கு உண்டாக வேண்டும்?
மண்ணுலகத்திற்கு அப்பால்         ஏன் அத்தனை ரகஸியம் சூழ்ந்து
கொண்டிருக்க வேண்டும்? எல்லாம் வல்ல இறைவன், அவரது கருத்தை நமக்கு உணர்த்தி, நன்மையும் தமது ரகஸியத்திற்      பங்குகொள்ளச்
செய்திருக்கக் கூடாதா? நாம் இந்த உலகத்தில்  பிறக்கவேண்டு மென்று
வேண்டிக் கொண்டோமா?        இதை விட்டுநீங்க வேண்டும் என்று
சொன்னோமா?      இல்லை. நம்மை எங்கிருந்தோ இவ்வுலகில் தள்ளி,
இங்கும்     அங்குமாக அலைத்து இழுத்துச் சிறிதும் ஈவு இரக்கமின்றி
நம்மை வெளியே ஏன் எறிந்துவிட வேண்டும்? இதை நினைத்த உடனே நமது உள்ளத்தில் துக்கம் பீறிட்டெழுகிறது.

என்னை கேளாது எங்கிருந்தோ
     இங்கே தூக்கி எறிந்திட்டான்;
என்னைக் கேளாது இன்னுமவன்
     எங்கே தூக்கி எறிவானோ?
என்னை செய்வேன்? இக்கொடுமை
     ஏழை உள்ளம்மறந்தொழிய