பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு543

Untitled Document
வன்னக் கிளியே ஒருகிண்ணம்
     மதுவை ஊற்றித் தருவாயே.
எல்லாம் இங்கோர் சூதாட்டம்;
     இரவும் பகலும் மாறாட்டம்
வல்லான் விதியே ஆடுமகன்;
     வலியில் மனிதர் கருவிகளாம்;
சொல்லா தெங்கும் இழுத்திடுவான்,
     ஜோடி சேர்ப்பான், வெட்டுவான்,
செல்லா தாக்கி ஒவ்வொன்றாய்த்
     திரும்ப அறையில் இட்டிடுவான்.

     இறைவன்  தலையிடாதபடி நம்மையே இச் சூட்டாத்தைத் தீர்த்துக்
கொள்ளும்படி     விட்டிருப்பானானால், திருப்திகரமான ஒரு முடிவைத்
தேடியிருப்போமல்லவா?

அன்பே யானும் நீயும் இசைந்து
     அயலில் எவரும் அறியாமல்
வன்பே உருவாம் விதியினையும்
     வளைத்துள் ளாக்கி முயல்வோமேல்,
துன்பே தொடரும் இவ்வுலகைத்
     துண்டு துண்டாய் உடைத்துப்பின்
இன்பே பெருகி வளர்ந்திடுமோர்
     இடமாய்ச் செய்ய இயலாதோ?

     இந்நிலையில் மனிதன்     என்னதான் செய்யக்கூடும்? மதுபானம்
செய்து, அறிவை மயக்கி அதில் மூழ்கிக் கிடப்பதுதான் அவன் செய்யக்
கூடியது. உறுதியாக ஒன்றுதான்  உள்ளது. அது யாது என்றால், நிகழும்
நிமிஷம்தான். வாழ்வு சிறிது     காலம்தான்; முடிவு நெருங்கி வருகிறது.
அந்தக் காலத்தை வீணே      போக்காது இன்ப நுகர்ச்சியில் கழித்தல்
வேண்டும். புகழ் வேண்டாம்; செல்வம்வேண்டாம்; அதிகாரம்வேண்டாம்.
இந்திரிய சுகங்களை, இப்பொழுதே    சக்தி இருக்கும் வரை, கைப்பற்ற
வேண்டும் இந்த  உபதேசத்தில் வாழ்விற்காணும் தோல்வியும் துன்பமும்
இவற்றைமூழ்கடிப்பதற்குவேண்டும் எக்களிப்பும்தெளிவுறுத்தப்படுகின்றன.

ஒழிந்த பாழில் ஒரு கணமாம்;
     உயிர்வாழ் உலகில் ஒரு கணமாம்;
வழிந்து விண்ணின் மீன்க ளெல்லாம்
     மங்கி மங்கி மறைந்தனவே