பக்கம் எண் :

544கவிமணியின் கவிதைகள்

Untitled Document
அழிந்த பாழின் உதயங் கண்டு
     அறியச் செல்வோர் அனைவருமே
எழுந்து நின்றார்; கண்டிலையோ?
     எழுவாய்! எழுவாய்! எழுவாயே!
வாராய் நண்பா, வருத்தமெனும்
     வாடைக் காலப் போர்வையினை
நேரா வருமிவ் வசந்தமெனும்
     நெருப்பில் வீசி எறிவாயே!
தேரா வாழ்வின் பறவைஇனும்
     செல்லும் தூரம் சிறிதேயாம்.
பாராய்! பாராய்! பறவை அதோ
     பறக்கச் சிறகும் விரித்ததடா!



     மதுவில் மகிழ்ந்த       மக்களுக்கு இறுதிக்காலம் வரும்பொழுது
அவர்கள்    சூனியத்தைச் சந்திப்பதற்குச் செல்லலாம். இங்கே வாழ்ந்து
தயங்கிக் கொண்டிருப்பவர்கள்       மதுக்கிண்ணத்தில் ஒன்றுமில்லாது
உறிஞ்சிக் குடிக்கும்    வரையில் உயிர்தாங்கட்டும். வாழ்வின் ரஸத்தை
முழுதும் நுகர்ந்து அதைச் சக்கையாகச் செய்துவிடட்டும்.

     வாழ்வு பற்றிய இக் கொள்கை நம் மனத்தைக் கவர்கிறது.ஆனால்,
இது வெகு அபாயகரமாகவும் உள்ளது. உய்யும் நெறிகாணாதுதவிக்கின்ற
ஒரு மனப்பான்மையிலிருந்து        இக் கொள்கை பிறந்துள்ளது. இக்
கொள்கையைப் பின்பற்றினால், உலக மக்கள் மிருகப் பிராயமாய்முடிந்து
விடுவார்கள். நாகரிகமும், மக்களுடைய இன்பமும்,தனக்குரியபொறுப்பை
உணராதிருக்கும் ஒருவனது மன நிலையை  அடிப்படையாகக் கொண்டு,
பிறப்பன அல்ல.

     என்றாலும், உமர் கய்யாம் சிலசில உண்மைகளின் அடிநிலத்தைத்
தொட்டுவிடுகிறார்.   இவ்வுலகத்திலே நம்மை மயக்கி ஈடுபடும்படியாகச்
செய்கின்ற அற்பப் பொருள்களுக்கு நாம்   முயன்று வருவதைக் கண்டு
உமர் நகையாடுகிறார்.       உலகத்துள்ள சமயங்கள் ஒவ்வொன்றிலும்
இவ்வுண்மை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால்,‘மகிழ்ச்சியில் திளைத்துக்
கொண்டிருக்கும் பொழுது இறைவனை நினைக்க மறந்து விடாதே’என்று
இச் சமயங்கள் வற்புறுத்துகின்றன.

    வாழ்க்கை தத்துவத்தைக்      றித்து, உமர் கய்யாம் கொண்டுள்ள
கொள்கை எவ்வாறாயினும்,     அவரது கலையுணர்ச்சி அதியற்புதமாக
உள்ளதென்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். விஷயங்களைச்